மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான நீட் தேர்வின் ஓஎம்ஆர் விடைத்தாள் பிரதி இன்றும் (13.6.2017) விடைகள் 15-ம் தேதியும் வெளியாகும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.


15-ம் தேதி வெளியாகிறது நீட் தேர்வு விடைகள் | மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான நீட் தேர்வின் ஓஎம்ஆர் விடைத்தாள் பிரதி இன்றும் விடைகள் 15-ம் தேதியும் வெளியாகும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்திருந்தது. இந்தத் தடைக்கு உச்ச நீதிமன்றம் நேற்று தடை விதித்ததுடன், தேர்வு முடிவை வெளியிட அனுமதி வழங்கியது. இதுதொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் ஓஎம்ஆர் விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதி சிபிஎஸ்இ இணையதளத்தில் 3 நாட்களுக்கு வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 2 நாட்களுக்கு மட்டுமே வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது ஜூன் 13-ம் தேதி (இன்று) ஓஎம்ஆர் விடைத்தாள் பிரதி வெளியிடப் படும். இதில் ஆட்சேபனை இருந்தால் 14-ம் தேதி மாலை 5 மணிக்குள் இணையதளம் வழியாக தெரிவிக்க வேண்டும். இதையடுத்து நீட் தேர்வுக்கான விடைகள் ஜூன் 15-ம் தேதி வெளியிடப்படும். இதில் ஆட்சேபனை இருந்தால் 16-ம் தேதி மாலை 5 மணிக்குள் அதை தெரிவிக்க வேண்டும். இந்த 2 நடைமுறைகளும் முடிந்த பிறகு ஒரு வாரத்துக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது | DOWNLOAD

No comments:

Post a Comment