பிஎட் படிப்புக்கான அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கு ஜூன் 21 முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்குநர் ஜெ.மஞ்சுளா அறிவித்துள்ளார்.


பி.எட். படிப்புக்கு ஜூன் 21-ம் தேதி முதல் விண்ணப்பம் கல்லூரி கல்வி இயக்குநர் அறிவிப்பு | பிஎட் படிப்புக்கான அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கு ஜூன் 21 முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்குநர் ஜெ.மஞ்சுளா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட ஓர் அறிவிப்பில் கூறி யிருப்பதாவது: 2017-2018-ம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள பிஎட் இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். இதற்கான விண் ணப்பங்கள் ஜூன் 21 முதல் 30-ம் தேதி வரை (சனி, ஞாயிறு உட்பட) பின்வரும் கல்வியியல் கல்லூரி களில் வழங்கப்படும். எங்கெங்கு கிடைக்கும்? சென்னை சைதாப்பேட்டை கல் வியியல் மேம்பாட்டு நிறுவனம், சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் கல்வியியல் மேம் பாட்டு நிறுவனம், குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரி, ஒரத்த நாடு அரசு கல்வியியல் கல்லூரி, புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரி, கோவை அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி, வேலூர் காந்திநகர் அரசு கல்வியியல் கல்லூரி, திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம் லட்சுமி கல்வியியல் கல்லூரி, சேலம் பேர்லாண்ட்ஸ் சாரதா கல்வியியல் கல்லூரி, மதுரை தியாகராசர் பர்செப்டார் கல்லூரி, தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரி, திரு நெல்வேலி பாளையங்கோட்டை செயின்ட் இக்னேஷியஸ் கல்வி யியல் கல்லூரி, திருவட்டாறு ஆத்தூர் என்.வி.கே.எஸ்.டி. கல்வி யியல் கல்லூரி ஆகிய இடங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும். விண்ணப்பக் கட்டணம் விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.500. கட்டணத்தை ரொக்கமாக செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250 மட்டும். அவர்கள் சுய சான்றொப்பமிட்ட சாதிச் சான்றிதழின் நகலை சமர்ப்பிக்க வேண்டும். தபால் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப் படமாட்டாது. நேரில் மட்டுமே வழங்கப்படும். பூர்த்தி செய் யப்பட்ட விண்ணப்பங்களை "செயலர், தமிழ்நாடு பிஎட் மாணவர் சேர்க்கை-2017, லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறு வனம், காமராஜர் சாலை, திரு வல்லிக்கேணி, சென்னை-600 005" என்ற முகவரிக்கு ஜூலை 3-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். பிஎட் மாணவர் சேர்க்கை வழிகாட்டி நெறிமுறைகள் www.ladywillingdoniase.com என்ற இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளன. இவ்வாறு அந்த அறிவிப்பி்ல் கூறப்பட்டுள்ளது  DOWNLOAD

No comments:

Post a Comment