30 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள் விரைவில் நியமனம் சட்டசபையில் அமைச்சர் சரோஜா தகவல்


30 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள் விரைவில் நியமனம் சட்டசபையில் அமைச்சர் சரோஜா தகவல் | 30 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று சட்டசபையில் அமைச்சர் சரோஜா கூறினார். தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. 30 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள் அதனைத் தொடர்ந்து, அமைச்சர் வி.சரோஜா பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பதிவு செய்த மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து திட்டங்களும் முறையாக செயல்படுத்தப்படுகிறது. சத்துணவு பணியாளர்கள் நியமனத்தில் விதவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தாலிக்கு தங்கம், திருமண உதவி தொகையை பெற ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை உள்ளது. இதற்காக, பஞ்சாயத்துகளில் டேட்டா என்டரி ஆப்பரேட்டர் நியமிக்கப்படுவார்கள். அங்கன்வாடி மையங்களில் 30 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இது தொடர்பாக கோர்ட்டில் நிலுவையில் இருந்த வழக்கு தற்போது அரசுக்கு சாதகமாக முடிந்துள்ளது. எனவே, விரைவில் 30 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். சபாநாயகர் பாராட்டு மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று தி.மு.க. உறுப்பினர்கள் பேசும்போது, தினமும் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை விவாதம் நடைபெறும். அந்த அளவுக்கு காரசாரமாக விவாதம் இருக்கும். ஆனால், நேற்று பேசிய தி.மு.க. உறுப்பினர் கீதா ஜீவன் தனது பேச்சை 14 நிமிடங்களில் முடித்துவிட்டார். இடையில் அமைச்சர்கள் யாரும் குறுக்கிட்டு பேசவில்லை. அவர் பேசி முடித்த பிறகே அமைச்சர் வி.சரோஜா பதில் அளித்தார். விரைவாக பேசி முடித்த தி.மு.க. உறுப்பினர் கீதா ஜீவனுக்கு சபாநாயகர் ப.தனபால் பாராட்டு தெரிவித்தார். அவர் பேசும்போது, "அனைத்து உறுப்பினர்களும் கீதா ஜீவனின் பேச்சை பின்பற்றி விரைந்து முடிக்க வேண்டும்" என்றார். இதனால், அவையில் சிரிப்பலை எழுந்தது.

No comments:

Post a Comment