SCROL

Sunday, June 4, 2017

பள்ளி மாணவர்களுக்காக கல்வித்துறையில் 41 புதிய அறிவிப்புகள் 6-ந் தேதி வெளியிடப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


பள்ளி மாணவர்களுக்காக கல்வித்துறையில் 41 புதிய அறிவிப்புகள் 6-ந் தேதி வெளியிடப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் | பள்ளி மாணவர்களுக்காக கல்வித்துறையில் 41 புதிய அறிவிப்புகள் 6-ந் தேதி வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தற்காலிக அங்கீகார ஆணை வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகார ஆணை வழங்கும் விழா காட்பாடியில் நேற்று நடந்தது. விழாவில் பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் கல்வித்துறையில் பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த அரசு மக்களின் அரசாக செயல்பட்டு வருகிறது. கல்வித்துறை வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. சுற்றுப்புற மக்களின் நலன் கருதியும், தமிழக பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் கல்வித்துறையில் 41 புதிய அறிவிப்புகள் 6-ந் தேதி வெளியிடப்படும். இந்த அறிவிப்புகளை நாடே திரும்பி பார்க்கும். இந்தாண்டு பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.22 ஆயிரத்து 892 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 17 ஆயிரம் மெட்ரிக் பள்ளிகளும், சுமார் 3 ஆயிரம் நர்சரி பள்ளிகளும் உள்ளன. உங்களுடைய சுற்றுப்புறத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நவீன கழிவறைகளை நீங்கள் கட்டித்தர வேண்டும். இதற்காக 5 ஆயிரம் கழிவறைகளை கட்டி தருவதற்காக தொழிற்சாலைகள் முன்வந்துள்ளன. பள்ளி மாணவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொண்டிருக்கிறோம். தனியார் பள்ளிகளை போல் அரசு பள்ளிகளிலும் சீருடை மாற்றப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்புகளை போலவே பிளஸ்-1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக அட்டவணை அறிமுகப்படுத்தப்படும். மெட்ரிக் பள்ளிகள் போல் அரசு பள்ளிகளிலும் மாதிரி தேர்வு வினாத்தாள்கள் வழங்கப்படும். பல்வேறு இடர்பாடுகள் வரும்போதும் அதை தாங்கக்கூடிய அரசாக இந்த அரசு உள்ளது. மாணவர்களுக்கு யோகா கற்றுத்தரப்படும். பள்ளி கட்டிட அனுமதிக்கு வீட்டு வசதித்துறை அமைச்சரிடம் பேசி நல்ல முடிவு அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

*#ஆசிரியர்கள் ஒரே பள்ளியில் அதிகபட்சம் 5 ஆண்டுகள் மற்றுமே பணியாற்றமுடியும் அடுத்தகல்வி ஆண்டு முதல் எனத்தகவல்.

*#நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் ஒரே அலகு UNIT ஆக மாற்றம் எனத்தகவல்.

*#கூடுதலாக 12 கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்படும் எனத்தகவல்.

*#அனைத்துவகை பள்ளிகளில் யோகா ஆசிரியர் நியமனம் எனத்தகவல்.

*#பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரப்படுத்தலாம் எனத்தகவல்.

*#6வது வகுப்பு முதல் கணினியியல் கல்வி ஒரு பாடமாக கட்டாயமாக கொண்டுவரப்படும் எனத்தகவல்.

*#தொடக்கக்கல்வியில் மாவட்டத்தில் உள்ள 1முதல்5 வரையிலும் அனைத்து ஓன்றியங்களையும் இனைத்து மாவட்ட அளவில் ஒரே அலகின் கீழ் கொண்டுவரப்படும் எனத்தகவல்.

*#அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வித்துறையில் உள்ள வேலைவாய்ப்புகளில் 10% வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனத்தகவல்.

2 comments:

  1. very nice this may be a golden period for education department

    ReplyDelete
  2. I welcome the new introduction of computer science subject for the classes starting from 6th.This has been a long dream for the computer science teachers.I appreciate the Minister for School Education and the education department for taken these steps..

    ReplyDelete