5 ஆண்டு ஆனர்ஸ் சட்டப் படிப்புக்கான கட் ஆஃப் மதிப்பெண் வெளியீடு ஜூலை 5-ம் தேதி கலந்தாய்வு


5 ஆண்டு ஆனர்ஸ் சட்டப் படிப்புக்கான கட் ஆஃப் மதிப்பெண் வெளியீடு ஜூலை 5-ம் தேதி கலந்தாய்வு | தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் பிஏ.எல்எல்பி, பிபிஏ.எல்எல்பி, பிகாம்.எல்எல்பி, பிசிஏ.எல்எல்பி ஆகிய 5 ஆண்டு கால ஆனர்ஸ் சட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இப்படிப்புக ளில் மொத்தம் 624 இடங்கள் உள்ளன. 2017-18ம் கல்வி ஆண்டில் மேற்கண்ட 5 ஆண்டு கால ஆனர்ஸ் சட்டப் படிப்புகளில் சேர 2,934 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில், ஒவ்வொரு படிப்புக்கான கட் ஆஃப் மதிப்பெண் பட்டியலை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது. இப்பட்டியலை சட்டப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.tndalu.ac.in) காணலாம். கலந்தாய்வு ஜூலை 5-ம் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் சம்பந்தப்பட்ட மாணவர் களுக்கு தபால் மூலமாக அனுப் பப்பட்டு வருவதாகவும், உரிய கட் ஆஃப் மதிப்பெண் தகுதியிருந்தும் அழைப்புக் கடிதம் வரவில்லை எனில் சட்டப் பல்கலைக்கழகத்தை தொடர்புகொள்ளலாம் என்றும் சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை தலைவர் வி.பாலாஜி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment