SCROL

Friday, June 2, 2017

செவிலியர் பணி மாறுதல் கலந்தாய்வு இனி ஆன்லைன் மூலம் நடத்தப்படும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல்


செவிலியர் பணி மாறுதல் கலந்தாய்வு இனி ஆன்லைன் மூலம் நடத்தப்படும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல் | செவிலியர் பணி மாறுதல் கலந்தாய்வு இனி ஆன் லைன் மூலம் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தொடக்க விழா சென்னை அண்ணாநகரில் அமைந்துள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் இயற்கை முறையில் உடல் பருமனை குறைக்கும் சிறப்பு சிகிச்சை முறை தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பேசியதாவது:- வரலாற்று நிகழ்வு டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பணி நியமனத்திற்காக மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் இதுவரை 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள், செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பணி நியமனங்கள் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு வரலாற்று நிகழ்வாக 9 ஆயிரத்து 990 செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இனி ஆன்லைன் கலந்தாய்வு செவிலியர்கள் பணிமாறுதல் இதுவரை பொது கலந்தாய்வு மூலம் நடைபெற்றது. இனி வரும் காலங்களில் செவிலியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் வெளிப்படையாக நடத்தப்படும். இதற்கான திட்டமிடல் பணிகள் வேகமாக முடிக்கப்படும். இது நிரந்தர செவிலியர்கள், ஒப்பந்த செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார செவிலியர்கள், செவிலியர்கள் நிலை 1 மற்றும் நிலை 2 என அனைவருக்கும் பொருந்தும். ஆன்லைன் முறை கலந்தாய்வு அனைத்து செவிலியர்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment