உயர்கல்வி நிறுவனங்களை ஒழுங்குப்படுத்த புதிய அமைப்பு யுஜிசி, ஏஐசிடிஇ-க்கு பதிலாக மத்திய அரசு திட்டம்.


உயர்கல்வி நிறுவனங்களை ஒழுங்குப்படுத்த புதிய அமைப்பு யுஜிசி, ஏஐசிடிஇ-க்கு பதிலாக மத்திய அரசு திட்டம் | நாடு முழுவதும் தொழில்நுட்பம், கலை, அறிவியல் என அனைத்து வகை உயர்கல்வி நிறுவனங்களை யும் கட்டுப்படுத்த யுஜிசி, ஏஐசிடிஇ ஆகியவற்றுக்கு பதிலாக ஒரே ஒரு புதிய அமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகள், அவற் றுக்கு இணைப்பு அங்கீகாரம் வழங் கும் பல்கலைக்கழகங்களை பல் கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கட்டுப்படுத்தி வருகிறது. அதே போல, பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி வழங்கும் கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்ப பல் கலைக்கழகங்களை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், யுஜிசி, ஏஐசிடிஇ ஆகிய 2 அமைப்புகளுக்கு பதிலாக அனைத்து வகையான உயர்கல்வி நிறுவனங்களையும் கட்டுப்படுத்தும் வகையில் 'உயர்கல்வி அதிகார ஒழுங்கு முகமை' (Higher Education Empowerment Regulation Agency) என்ற புதிய அமைப்பை உருவாக்க மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது. இதுதொடர்பாக நிதி ஆயோக் அமைப்புடன் ஆலோசித்து வருகி றது. புதிய அமைப்புக்கான விதிமுறைகள், சட்டதிட்டங்களை உருவாக்கும் பணியில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், நிதி ஆயோக் அதிகாரிகள் மும்முரமாக இறங்கியுள்ளனர். கல்வி நிறுவனங்களைக் கட்டுப் படுத்த பல்வேறு அமைப்புகள் இருந் தால், அது அளவுக்கு அதிகமான கட்டுப்பாடுகளுக்கு வழிவகை செய் யும். அதனால் கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி சுதந்திரம் பாதிக்கப்படும். இதைக் கருத்தில்கொண்டே, தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழில்நுட்பம் அல்லாத கலை, அறிவியல் கல்லூரிகள் ஆகிய அனைத்தையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர மத்திய அரசு முடிவுசெய்துள்ளதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. உயர்கல்வி நிறுவனங் களைக் கட்டுப்படுத்த தேசிய அள வில் ஒரே ஒரு அமைப்பு மட்டுமே இருப்பது நல்லது என்று பல் வேறு கல்விக் குழுக்கள் பரிந் துரைத்திருப்பது குறிப்பிடத் தக்கது.

 

Comments