மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டு விவகாரம் | முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப இடைக்காலத் தடை அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ்


மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டு விவகாரம் | முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப இடைக்காலத் தடை அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ் | ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தத் திட்டமிட்டுள்ள தேர்வின் மூலமாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக் காலத் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக இரு வாரங்களுக்குள் அரசு பதிலளிக்கவும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் நலச் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.நம்புராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் நிலை -1 ஆகிய பதவிகளை நிரப்புவதற்கு கடந்த மே 9-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த அறிவிப்பாணை யில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடங்களை மட்டுமே ஆசிரியர் தேர்வு வாரியம் ஒதுக்கீடு செய்துள்ளது. 2016-ம் ஆண்டு கொண்டு வரப் பட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமை கள் சட்டப்பிரிவு 34-ன்படி, மொத்தப் பதவிகளில் 4 சதவீத இடங்களை மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்க வேண்டும். மேலும் 40 முதல் 70 சதவீதம் உடல் ஊனமுற்றவர்கள் மட்டுமே மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க தகுதியுடைவர்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. உடல் ஊனத்துக்கான தகுதியை நிர்ணயிக்காமல் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அரசாணைக்கு எதிராக ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த தேர்வு அறிவிப்பு சட்ட விரோதமானது. தற்போது ஆயிரத்து 663 முது கலை பட்டதாரி ஆசிரியர் பணி யிடங்களை நிரப்ப நடத்தப்படும் இத்தேர்வில் வெறும் 18 இடங்கள் மட்டுமே மாற்றுத் திறனாளிகளுக் காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. எனவே 2016-ம் ஆண்டு இயற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்படி 4 சதவீத இடங்களை, அதாவது 67 இடங்களை மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்க வேண்டும். எனவே மாற்றுத்திறனாளி களுக்கு ஆசிரியர் நியமனத்தில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதுடன் உடல் ஊனத்தின் தகுதி குறித்து நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளையும் நீக்கி புதிய அறிவிப்பு வெளியிட வேண்டும், என ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும். ஏற்கெனவே பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்வதுடன், அதனடிப்படையில் தேர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு: "மாற்றுத்திறனாளிகளின் சட்டத்தின்படி அவர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். எந்த அடிப்படையில் உடல் ஊனம் 40 முதல் 70 சதவீதம் என்பது நிர்ணயம் செய்யப்படுகிறது என்பது குறித்து அரசிடம் கேட்டு தெரிவிப்பதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். எனவே, இதுதொடர்பாக வரும் ஜூன் 16-ம் தேதிக்குள் அரசு விளக்கம் அளிக்க வேண்டும். அதுவரை ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்களைப் பெற்று தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடலாம். ஆனால் எந்தவொரு ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்பும் நடவடிக்கைகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஈடுபடக்கூடாது என இடைக்காலத்தடை விதிக்கிறோம்" என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

No comments:

Post a Comment