SCROL

Thursday, July 6, 2017

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 1,224 எம்.பி.பி.எஸ். மருத்துவர்கள், 600 சிறப்பு உதவி மருத்துவர்கள், 700 செவிலியர்கள், 137 உதவி மருத்துவ அலுவலர்கள் (இயற்கை மருத்துவம்) 333 மருந்தாளுனர்கள், 1,234 ஆய்வு நுட்புனர்கள், 179 இருதய வரைபட நுட்புனர்கள், இயன்முறை சிகிச்சையாளர், நுண்கதிர் வீச்சாளர் மற்றும் விழிஒளி பரிசோதகர்கள் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்படுவார்கள்.


தமிழக சட்டசபையில் மக் கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைக்கான மானியக் கோரிக்கை மீது நேற்று எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு பதில் அளித்த அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், பின்னர் அந்தத் துறைக்கான புதிய 108 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 1,224 எம்.பி.பி.எஸ். மருத்துவர்கள், 600 சிறப்பு உதவி மருத்துவர்கள், 700 செவிலியர்கள், 137 உதவி மருத்துவ அலுவலர்கள் (சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யோகா-இயற்கை மருத்துவம்) 333 மருந்தாளுனர்கள், 1,234 ஆய்வு நுட்புனர்கள், 179 இருதய வரைபட நுட்புனர்கள், இயன்முறை சிகிச்சையாளர், நுண்கதிர் வீச்சாளர் மற்றும் விழிஒளி பரிசோதகர்கள் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்படுவார்கள். பொதுமக்களுக்கு பொது சுகாதாரம் குறித்த பரந்த அளவிலான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவசர காலங்களில் முன்னெச்சரிக்கை தகவல் களை மக்களிடையே பரப்பிடவும் அம்மா நலவாழ்வு வானொலி சேவை (அம்மா ஹெல்த் ரேடியோ) தொடங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment