ஐந்தாண்டு ஆனர்ஸ் சட்டப் படிப்புகளுக்கான 2-வது கட்ட கலந்தாய்வு ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என்று சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


ஆனர்ஸ் சட்டப் படிப்புக்கு 11-ல் 2-ம் கட்ட கலந்தாய்வு சட்டப் பல்கலை. அறிவிப்பு | ஐந்தாண்டு ஆனர்ஸ் சட்டப் படிப்புகளுக்கான 2-வது கட்ட கலந்தாய்வு ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என்று சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் பிஏ.எல்எல்பி, பிபிஏ.எல்எல்பி, பிகாம்.எல்எல்பி, பிசிஏ.எல்எல்பி ஆகிய 4 விதமான ஆனர்ஸ் சட்டப் படிப்புகள் (5 ஆண்டுகள்) வழங்கப்படுகின்றன. இந்த படிப்புகளில் மொத்தம் 610 இடங்கள் உள்ளன. நடப்பு கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த புதன்கிழமை நடந்தது. அதன்மூலமாக 310 இடங்கள் நிரப்பப்பட்டன. இந்த நிலையில், எஞ்சியுள்ள 200 காலியிடங்களை நிரப்புவதற்கான 2-வது கட்ட கலந்தாய்வு ஜூலை 11-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என சட்டப் பல்கலைக்கழக பதிவாளரும் சட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை தலைவருமான வி.பாலாஜி அறிவித்துள் ளார். 2-வது கட்ட கலந்தாய்வுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணும் வெளியிடப்பட்டுள்ளது. இக்கலந் தாய்வுக்கான அழைப்புக் கடிதம் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. உரிய கட்-ஆஃப் மதிப்பெண் தகுதியிருந்தும் அழைப்புக் கடிதம் கிடைக்கப்பெறாத மாணவர்கள் பல்கலைக்கழகத்தை தொடர்புகொண்டு மாற்று அழைப்புக் கடிதத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments