எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 37 ஆயிரம் விண்ணப்பங்கள் ஒரே வாரத்தில் விற்பனை-தரவரிசை பட்டியல் 14-ம் தேதி வெளியீடு


எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 37 ஆயிரம் விண்ணப்பங்கள் ஒரே வாரத்தில் விற்பனை-தரவரிசை பட்டியல் 14-ம் தேதி வெளியீடு | எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கு 7 நாட்களில் 37 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகி யுள்ளன. தரவரிசைப் பட்டியலை வரும் 14-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2017-18-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க் கைக்கான விண்ணப்ப விநியோ கம் 22 அரசு மருத்துவக் கல்லூரி களில் கடந்த 27-ம் தேதி தொடங்கி யது. அரசு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஒரு விண்ணப்ப மும், தனியார் கல்லூரிகளில் நிர் வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனியாக ஒரு விண்ணப்பமும் விநியோகிக்கப்படுகிறது. ஒவ் வொரு விண்ணப்பத்துக்கும் விண் ணப்ப மனுவுடன் ரூ.500க்கான டிடியை கொடுத்து மாணவர் கள் ஆர்வமாக விண்ணப்பங்களை வாங்கிச் செல்கின்றனர். நேற்று வரை 37,928 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. இவை தவிர www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில் இருந்தும் மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.  விண்ணப்ப விநியோகம் வரும் ஜூலை 7-ம் தேதி வரை தினமும் (ஞாயிற்றுக்கிழமை உட்பட) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ, தபால் மூலமாகவோ செயலாளர், தேர்வுக்குழு, மருத் துவக் கல்வி இயக்ககம், 162, ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை, கீழ்ப் பாக்கம், சென்னை-600010 என்ற முகவரிக்கு ஜூலை 8-ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இணையதளங் களில் இருந்து பதிவிறக்கம் செய்த விண்ணப்பங்களை அனுப் பும்போது ரூ.500-க்கான கேட்பு வரைவோலையை இணைத்து அனுப்ப வேண்டும். ஜூலை 17-ம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது. தரவரிசைப் பட்டியல் வரும் 14-ம் தேதி வெளியிடப்படுகிறது.

No comments:

Post a Comment