மருத்துவ படிப்பில் 85 சதவீத ஒதுக்கீடுக்கு கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது ஐகோர்ட்டில் அரசு பதில் மனு


மருத்துவ படிப்பில் 85 சதவீத ஒதுக்கீடுக்கு கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது ஐகோர்ட்டில் அரசு பதில் மனு | மருத்துவ படிப்பில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக ஐகோர்ட்டில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவப் படிப்புக்கான மாணவ சேர்க்கை நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் தமிழகத்தில் உள்ள மருத்துவ படிப்புக்கான மொத்த இடங்களில், 85 சதவீதம் இடங்கள் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்து தமிழக அரசு கடந்த மாதம் அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை எதிர்த்து, சி.பி.எஸ்.இ. என்ற மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு மனுவில், தமிழக அரசின் அரசாணை பாரபட்சமானது என்றும் சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட பிற பாடத்திட்டங்களின் கீழ் படித்த மாணவர்களுக்கு 15 சதவீத இடங்களை மட்டும் ஒதுக்கி பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணையை ரத்து செய்யவேண்டும்' என்றும் கூறியிருந்தனர். இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கிற்கு தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதா கிருஷ்ணன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 'மருத்துவ படிப்பில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடங் களை ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. இதன்படி, அரசாணையை பிறப்பித்துள்ளது. இவ்வாறு முடிவு எடுத்து அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரமும் உள்ளது. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களுக்கு ஒதுக்கீடு வழங்க சுப்ரீம் கோர்ட்டும் அனுமதியளித்துள்ளது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும். அரசாணையை ரத்து செய்ய கூடாது' என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment