SCROL

Saturday, July 15, 2017

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோசனை பெற்று பள்ளிக் கட்டண நிர்ணயக் குழு தலைவரை நியமிக்க அரசு முடிவு


உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோசனை பெற்று பள்ளிக் கட்டண நிர்ணயக் குழு தலைவரை நியமிக்க அரசு முடிவு | பள்ளிக் கட்டண நிர்ணயக்குழு தலைவரை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் ஆலோசித்து நியமிக்கும் வகையில், சட்டத்திருத்த மசோதா பேரவையில் அறிமுகம் செய்யப்பட்டது. தனியார் பள்ளிகளில் கட்டணங்கள் அதிகளவில் வசூலிக்கப்படுவது தொடர்பாக புகார்கள் வந்தன. இதையடுத்து, அப்பள்ளி களில் வசூலிக்கப்படும் கட்டணங்களை முறைப்படுத்தும் வகையில், தமிழக அரசு கடந்த 2009-ம் ஆண்டு தமிழ்நாடு பள்ளிகள் கட்டணங்கள் முறைப்படுத்துதல் சட்டம் இயற்றியது. இச்சட்டப்படி கட்டணங்களை நிர்ணயிக்க குழு அமைக்கப்பட்டு வந்தது. இக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டு வந்தார். சட்டத்தில் திருத்தம் இந்நிலையில், தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக்குழு தலைவரை அரசே நேரடியாக நியமிக்காமல், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை கலந்தாலோசித்து நியமிக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக தனியார் பள்ளிகள் கட்டணங்கள் முறைப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படுகிறது. இதற்கான மசோதாவை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிமுகப்படுத்தினார்.

No comments:

Post a Comment