மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு


மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு | தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிபவர்கள் மற்றும் நிறுவனங்களை தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்து அவர்கள் முதல்-அமைச்சரால் ஊக்குவிக்கப்பட்டு கவுரவப்படுத்தப்படுகிறார்கள். அந்த வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள் மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, 6 விதமான விருதுகள் சுதந்திர தினவிழாவில் (ஆகஸ்டு 15, 2017) வழங்கப்பட உள்ளன. மேற்காணும் விருதுகள் பெற, அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலரிடம் விண்ணப்பம் பெற்று, விண்ணப்பங்கள் மற்றும் உரிய சான்றுகளுடன், சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலரிடம் பரிந்துரை பெற்று மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம், லேடிவெலிங்டன் கல்லூரிவளாகம், திருவல்லிக்கேணி, சென்னை-5 என்ற முகவரிக்கு வருகிற 14-ந் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்குறிப்பிட்ட விண்ணப்பங்களை www.scd.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment