பி.ஆர்க். மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு சிறப்பு நுழைவுத்தேர்வு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

Image result for பி.ஆர்க்

பி.ஆர்க். மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு சிறப்பு நுழைவுத்தேர்வு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு | இந்த ஆண்டு பி.ஆர்க். மாணவர் சேர்க்கைக்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் இயக்குநரும், தமிழ் நாடு கட்டிடக்கலை திறனறிவு தேர்வு செயலாளருமான பேராசி ரியை பி.மல்லிகா வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது: இந்த ஆண்டு தேசிய கட்டிடக் கலை திறனறிவுத்தேர்வு (நாட்டா) தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை, இளங்கலை கட்டிடக்கலை படிப்புக்கான (பி.ஆர்க்.) இடங்களை விடவும் குறைவாக இருக்கிறது. எனவே, தனியார் கல்லூரிகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, பி.ஆர்க். மாணவர் சேர்க்கையை வரன்முறைப்படுத்தும் குழுவின் வழிகாட்டுதலின்படி, நடப்பு கல்வி ஆண்டில் (2017-2018) புதிதாக தமிழ்நாடு கட்டிடக்கலை திறனறிவுத்தேர்வு (தமிழ்நாடு நாட்டா) என்ற சிறப்புத்தேர்வை நடத்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. திறனறிவுத்தேர்வு மதிப்பெண் எனவே, பி.ஆர்க். படிப்புக்கு இந்த ஆண்டுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு பிளஸ் 2 மதிப்பெண் மற்று்ம 2016, 2017 நாட்டா தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் அடிப்படையில் ஒற்றைச்சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த முறையில், அரசு ஒதுக்கீட்டில் ஏற்படும் காலியிடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப முடியாத பட்சத்தில் அந்த காலியிடங்கள் பிளஸ் 2 மதிப்பெண் மற்றும் ஜெஇஇ-II மதிப்பெண் அடிப்படையிலும், அதன்பிறகும் காலியிடங்கள் இருந்தால் அவை பிளஸ் 2 மதிப்பெண் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் தமிழ்நாடு கட்டிடக்கலை திறனறிவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும் நிரப்பப்படும். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

No comments:

Post a Comment