SCROL

Wednesday, July 19, 2017

FREE BUS PASS | பஸ் பாஸ் வழங்கப்படும் வரை சீருடையில் வரும் மாணவ-மாணவிகள் பஸ்சில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த மாத இறுதிக்குள் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்.


இதுவரை 27½ லட்சம் பேர் விண்ணப்பம்: அடுத்த மாத இறுதிக்குள் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் அதிகாரிகள் தகவல் | பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு பஸ்களில் இலவச பஸ் பாஸ் கேட்டு இதுவரை 27½ லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாகவும், அடுத்த மாத இறுதிக்குள் அனைவருக்கும் பஸ் பாஸ் வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.   தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் மற்றும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் கட்டணமில்லா கையடக்க இலவச பஸ் பாஸ் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. 2016-2017-ம் கல்வியாண்டில் ரூ.504 கோடி செலவில் 31 லட்சத்து 11 ஆயிரத்து 992 பள்ளி மாணவ-மாணவிகள் இலவச பஸ் பாஸ் அட்டைகள் பெற்று பயன் அடைந்தனர். நடப்பு கல்வியாண்டில் (2017-2018) இந்த திட்டம் குறித்து போக்குவரத்து ஆணைய அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:- 2017-2018-ம் கல்வியாண்டில் இதுவரை 27½ லட்சம் பேர் இலவச பஸ் பாஸ் கேட்டு விண்ணப்பித்து இருக்கின்றனர். அவர்களுக்கு கையடக்க இலவச பஸ் பாஸ் அட்டைகள் வழங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். இந்த மாதம் அல்லது ஆகஸ்டு மாத இறுதிக்குள் இந்த பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டுவிடும். சென்னை மண்டலத்தை பொறுத்தவரையில் கடந்த கல்வியாண்டில் 3 லட்சத்து 61 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் அட்டைகள் வழங்கப்பட்டன. நடப்பாண்டில் இதுவரை ஒரு லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருக்கின்றனர். அவர்களில் 58 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு பஸ் பாஸ் தயாராகிவிட்டது. பஸ் பாஸ் வழங்கப்படும் வரை சீருடையில் வரும் மாணவ-மாணவிகள் பஸ்சில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment