SCROL

Saturday, July 1, 2017

TNPSC குரூப்-1 தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறுவது உண்மைக்கு புறம்பானது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கம்


TNPSC குரூப்-1 தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறுவது உண்மைக்கு புறம்பானது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கம் | குரூப்-1 தேர்வில் முறைகேடு நடந்ததாக டாக்டர் ராமதாஸ் கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானது என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய குரூப்-1 தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அந்த தேர்வு முடிவுகளை ரத்து செய்யவேண்டும் என்றும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருந்தார். இது உண்மைக்கு புறம்பானது என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- 28.06.2017 நாளிட்ட மாலைமலர் / 29.06.2017 நாளிட்ட தி இந்து, தினத்தந்தி நாளிதழ்களின் வாயிலாகவும் மற்றும் தொலைக்கட்சிகள் வாயிலாகவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர்.இராமதாஸ் தெரிவித்துள்ளார். இச்செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பான உள்நோக்கம் கொண்ட செய்தியாகும். இந்த அவதூறு செய்தி தொடர்பாக கீழ்க்கண்ட விவரம் தெரிவிக்கப்படுகிறது  DOWNLOAD

No comments:

Post a Comment