SCROL

Sunday, August 6, 2017

போலீஸ் துறையில் இணையதள சேவை வீட்டில் இருந்தே புகாரை பதிவு செய்யலாம்


போலீஸ் துறையில் இணையதள சேவை வீட்டில் இருந்தே புகாரை பதிவு செய்யலாம் | தமிழகத்தில் உள்ள 1,913 போலீஸ் நிலையங்கள் மற்றும் காவல் சிறப்பு பிரிவுகள் வலைபின்னல் திட்டத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் eservices.tnpolice.gov.in என்ற இணையவழி மூலம், வீட்டில் இருந்தபடியே போலீஸ் நிலையத்தில் புகார்களை பதிவு செய்வது, முதல் தகவல் அறிக்கையை பார்ப்பது, பதிவிறக்கம் செய்வது (பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, தீவிரவாதம், இளம் சிறார் மற்றும் சர்ச்சைக்குரிய முக்கிய வழக்குகள் நீங்கலாக) வழக்குகளின் நிலை பற்றி அறிவது போன்ற பல சேவைகளை பெற முடியும். தமிழக போலீஸ் துறையின் கைபேசி செயலி play store மற்றும் TN Police Website -ல் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் தொடங்கப்பட்டுள்ளது. போலீஸ் துறையில் வழங்கப்படும் இலவச இணையதள சேவைகளை அரசு 'இ-சேவை' மையங்களில் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment