தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடத்துவதற்காக ‘நீட்’ தேர்வு அடிப்படையில் தரவரிசை பட்டியலை வெளியிட்ட பின்னர் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேட்டி.


தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடத்துவதற்காக 'நீட்' தேர்வு அடிப்படையில் தரவரிசை பட்டியலை வெளியிட்ட பின்னர் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 2017-18ம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவ சேர்க்கைக்காக மாணவர்களிடம் இருந்து 31 ஆயிரத்து 629 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 27 ஆயிரத்து 212 விண்ணப்பங்கள் தகுதி உள்ளவை. இந்த விண்ணப்பங்களில் 3-ம் பாலினத்தை சேர்ந்த ஒருவரது விண்ணப்பமும் அடங்கும். மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவர்களிடம் இருந்து 20 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விளையாட்டு வீரர்களுக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அவற்றுக்கு 358 விண்ணப்பங்கள் வந்துள்ளன. முன்னாள் ராணுவ வீரர்கள் பிள்ளைகளுக்கு 3 எம்.பி.பி.எஸ். இடங்களும், ஒரு பல் மருத்துவ இடமும் உள்ளது. இதற்கு 471 பேர் விண்ணப்பித்து உள்ளனர். கலந்தாய்வு மொத்த விண்ணப்பங்களில் மாநில அரசு கல்வித்திட்டத்தில் படித்தவர்கள் 27 ஆயிரத்து 458 பேர் ஆவர். மத்திய அரசு கல்வித்திட்டத்தில் (சி.பி.எஸ்..) படித்தவர்கள் 3 ஆயிரத்து 418 பேர். .சி.எஸ்.. பாடத்திட்டத்தில் படித்தவர்கள் 207 பேர். பழைய மாணவர்கள் 5 ஆயிரத்து 636 பேர். சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர விண்ணப்பித்தவர்கள் 20 ஆயிரத்து 244 பேர் ஆவர். அவர்களில் தகுதியானவர்கள் 18 ஆயிரத்து 40 பேர். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட சிறப்பு பிரிவினர்களுக்கு சென்னை பன்நோக்கு சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் இன்று (வியாழக்கிழமை) கலந்தாய்வு காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில் மொத்தம் 48 பேர் கலந்துகொள்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். மாநில பாடத்திட்ட மாணவர்கள் 'நீட்' தேர்வால் மருத்துவ படிப்பில் சி.பி.எஸ்.. மாணவர்கள் அதிகம் சேர்வார்கள் என்ற கருத்து நிலவியது. ஆனால் மாநில பாடத்திட்டத்தில் படித்த 2 ஆயிரத்து 224 பேருக்கும், சி.பி.எஸ்.. உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி வாரியத்தில் படித்த 1,310 பேருக்கும் இடம் கிடைக்கும் என தெரிகிறது.

No comments:

Post a Comment