வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) கணக்குக்கு பணம் செலுத்துவது, பணம் எடுப்பது மற்றும் விவரங்கள் பெறுவது உள்ளிட்டவை எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.


பி.எப். கணக்கு விவரங்கள் பெற எளிய நடைமுறை | வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) கணக்குக்கு பணம் செலுத்துவது, பணம் எடுப்பது மற்றும் விவரங்கள் பெறுவது உள்ளிட்டவை எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. மாத சம்பளம் பெறுவோரிடம் இருந்து பி.எப்.தொகை பிடித்தம் செய்யப்பட்டு சேமிக்கப்பட்டு வருகிறது. இதில் 5 கோடி சந்தாதாரர்கள் மற்றும் 50 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த சேமிப்புக் கணக்கில் மாதம்தோறும் பிடிக்கப்படும் தொகை, இருப்புத் தொகை, வட்டித் தொகை உள்ளிட்ட விவரங்கள் மாதம்தோறும் சந்தாதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், '-கவர்னன்ஸ்' முறையில் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதில், பி.எப்.. என்ற செயலி மூலம், சந்தாதாரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள யு..என் என்ற எண்ணைப் பயன்படுத்தி தங்கள் பி.எப். கணக்கு இருப்பு விவரங்களை அறிந்து கொள்ளலாம். மேலும், இந்த செயலி மூலம் பி.எப். கணக்குக்கு பணம் செலுத்துதல் மற்றும் கணக்கில் உள்ள பணத்தை திரும்ப எடுத்தல் ஆகிய நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment