போராட்டம் தற்காலிக வாபஸ்: ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் அறிவிப்பு | செப்டம்பர் 21ம் தேதி தலைமைச்செயலாளர் நேரில் ஆஜராகி இவ்வழக்கில் விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு.


போராட்டம் தற்காலிக வாபஸ்: ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் அறிவிப்பு | செப்டம்பர் 21ம் தேதி தலைமைச்செயலாளர் நேரில் ஆஜராகி இவ்வழக்கில் விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறபட்டுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளையின் எச்சரிக்கையை அடுத்து போராட்டத்தை அரசு ஊழியர்கள் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து ஐகோர்ட் மதுரை கிளையில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் நீதிபதிகளிடம் ஒப்புதல் அளித்துள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஐகோர்ட் தடை விதித்திருந்தது. எனினும் தடையை மீறி அரசு ஊழியர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வந்தனர். இதன்பின் போராட்டம் தொடர்பான உத்தரவை மீறியதால் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பாக விளக்கமளிக்க ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த 3 பேர் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகினர். அப்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும் தடையை மீறியும், உத்தரவுகளை மீறியும் அரசு ஊழியர்கள் ஏன் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறீர்கள் என்று நீதிபதிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். போரட்டத்தை உடனே கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். நீதிமன்றத்தை நாடாமல் போராட்டத்தில் ஈடுபட்டது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனையடுத்து அரசு ஊழியர்கள் ஒரு மணிநேரத்தில் காத்திருப்பு போராட்டத்தை கைவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. போராட்டத்தை கைவிடாவிட்டால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அப்புறப்படுத்தப்படுவார்கள். நிபந்தனையின்றி வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனிடையே ஐகோர்ட் எச்சரிக்கையை அடுத்து போராட்டம் தற்காலிக வாபஸ் பெறுவதாக அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர். வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக ஐகோர்ட் மதுரை கிளையில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் நீதிபதிகளிடம் ஒப்புதல் அளித்துள்ளனர். மேலும் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இன்றே பணிக்கு திரும்புங்கள் இதனிடையே பகல் 2 மணிக்குள் அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை புனிதமான நாள் என்பதால் இன்றே பணிக்கு திரும்புங்கள் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் செப்டம்பர் 21ம் தேதி தலைமைச்செயலாளர் நேரில் ஆஜராகி இவ்வழக்கில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஊழியர்களை விடுவிக்க உத்தரவு அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்களை விடுவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment