Letter No.54867-CMPC-2017-1 dated:30-10-2017 - அக்டோபர் மாத புதிய ஊதிய நிலுவைத்தொகையை 20.11.17 க்குள் பெற்று வழங்க வேண்டும்.பிறகு நவம்பர் மாத ஊதியம பில் சமர்பிக்கப்பட வேண்டும் என நிதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். Recommendations of the Official Committee 2017 on revision of pay and allowances and other related benefits – Admitting of salary – Instructions – Regarding. | DOWNLOAD
kalvisolai.in | kalviseithi | trb news | tntet news | tnpsc news | employment news | flash news | college news | exam news | result news | materials news | school news | g.o news
Tuesday, October 31, 2017
Monday, October 30, 2017
COMMON RECRUITMENT PROCESS FOR RECRUITMENT OF SPECIALIST OFFICERS | பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள ஆயிரத்து 1315 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான பொது எழுத்து தேர்வுக்கான அறிவிப்பை வங்கிகள் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ளது.
Sunday, October 29, 2017
உயர் நீதிமன்றத்தில் துப்புரவு பணிக்கு பொறியியல் பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பம் வேலையின்மையின் உச்சம் என கருத்து
Saturday, October 21, 2017
New Version of Simple Calculator_7.3 | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY SIMPLE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.
Friday, October 20, 2017
தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு முடிவு 23-ல் வெளியீடு
தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு முடிவு 23-ல் வெளியீடு | தமிழ்நாடு மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான ஆர்.பழனிசாமி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தட்டச்சு, சுருக்கெழுத்து (தமிழ் மற்றும் ஆங்கிலம்), மற்றும் கணக்கியல் தேர்வுகளின் முடிவுகள் 23-ம் தேதி (திங்கள்கிழமை) மதியம் 1 மணிக்கு வெளியிடப்படும். தேர்வர்கள் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் (www.tndte.gov.in) தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Thursday, October 19, 2017
டிசம்பருக்குள் பள்ளிக் கல்வித்துறை முழுவதும் கணினி மயமாக்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
டிசம்பருக்குள் பள்ளிக் கல்வித்துறை முழுவதும் கணினி மயமாக்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் | டிசம்பர் மாதத்திற்குள் பள்ளிக் கல்வித் துறை முழுவதும் கணினிமயமாக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். திருச்செந்தூர் அறிவியல் பூங்கா திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: மாணவர்கள் பொதுவாக மருத்துவம், ஆட்சிப் பணி, பொறியியல், வேளாண்மை மற்றும் கால்நடை உள்ளிட்ட பாடத் திட்டங்களையே பெரும்பாலும் பயின்று வருகின்றனர். ஆனால் மாணவர்கள் இது போன்றுள்ள 246 பாடத் திட்டங்களையும் பயின்றால் வேலையில்லாத் திண்டாட்டம் ஒழியும். மேலும் தற்போதுள்ள பாடத் திட்டத்திற்கேற்ப, 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ. 483 கோடியில் தமிழகம் முழுவதும் 412 பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது. கடந்த தேர்வில் ரேங்க் சிஸ்டம் கொண்டுவரப்பட்டது.பொதுத் தேர்வு முடிவுகளை குறுஞ்செய்தி மூலம் மாணவர்களுக்கு உடனடியாக அனுப்பும் முறை, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் நடைமுறைக்கு வந்தது. பள்ளிக் கல்வித் துறை சார்பில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது. அந்த ஸ்மார்ட் கார்டுடன், மாணவர்களின் ஆதார் எண், முகவரி, ரத்த வகை இணைக்கப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் பேரிடர்கள் போது, காப்பீடுத் திட்டத்தின் மூலம் 48 மணி நேரத்துக்குள் உரிய இழப்பீடு வழங்கப்படும். அது போல வரும் டிசம்பருக்குள் பள்ளிக் கல்வித் துறை முழுவதும் கணினி மயமாக்கப்படும்.இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலியிடங்களுக்கு 2013இல் டெட் தேர்வு எழுதி தேர்ச்சியடைந்தவர்களுக்கு விரைவில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் ஆசிரியர் பணியிடங்களுக்கு ரூ.7500 தொகுப்பு ஊதியத்திலும் கூடுதலான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார் செங்கோட்டையன்.
Thursday, October 12, 2017
G.O.Ms.No.303, Dated 11th October 2017. | PAY COMMISSION G.O DOWNLOAD | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
G.O.Ms.No.303, Dated 11th October 2017. | PAY COMMISSION G.O DOWNLOAD | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. | FINANCE [Pay Cell] DEPARTMENT G.O.Ms.No.303, Dated 11th October 2017. (Heyvilambi, Puratasi-25, Thiruvalluvar Aandu 2048) ABSTRACT OFFICIAL COMMITTEE, 2017 - Recommendations of the Official Committee, 2017 on revision of pay, allowances, pension and related benefits – Revision of Pay - Orders - Issued - The Tamil Nadu Revised Pay Rules, 2017 - Notified. Read the following:- 1. G.O.Ms.No.40, Finance (Pay Cell) Department, dated: 22-02-2017. 2. G.O.Ms.No.189, Finance (Pay Cell) Department, dated 27-06-2017. | DOWNLOAD
G.O NO. 300 DT: OCTOBER 10, 2017 3% D.A HIKE G.O DOWNLOAD | D.A. HIKE FROM 136% TO 139% | தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
G.O NO. 300 DT: OCTOBER 10, 2017 3% D.A HIKE G.O DOWNLOAD | 3% D.A ANNOUNCED | D.A. HIKE FROM 136% TO 139% | தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அகவிலைப்படி - 01.07.2017 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன. | DOWNLOAD
Wednesday, October 11, 2017
தமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. விரிவான விவரங்கள்.
தமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. தமிழக அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.6,100இல் இருந்து 15,700 ஆக உயர்வு. தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு.7வது ஊதிய குழு பரிந்துரைகள் - 1.10.2017 தேதி முதல் பணப்பயனுடன் அமல்படுத்தப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு : மத்திய ஊதிய குழு திருத்திய ஊதிய விகிதங்களை செயல்படுத்தும் பொழுதெல்லாம், தமிழ்நாடு அரசும் அதே ஊதிய விகிதங்களை மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவித்து வந்துள்ளது. அதே போல், ஒவ்வொரு முறையும் மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தும் போது, உடனுக்குடன் மாநில அரசும் உயர்த்திய அகவிலைப்படியை வழங்கி வருகிறது. மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலில் செயல்படும் தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள ஊதிய விகிதங்களின் அடிப்படையில், மாநில அரசின் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதத்தை உயர்த்தி வழங்குவது குறித்து தக்க பரிந்துரைகளை தமிழ்நாடு அரசுக்கு அளித்திட 'அலுவலர் குழு' 2017-ஐ அமைத்தது. அதன்படி, அலுவலர் குழு ஆய்வுகள் மேற்கொண்டு தனது பரிந்துரைகளை 27.9.2017 அன்று தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பித்தது. இதுவரை தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட அலுவலர் குழுக்கள் எடுத்துக் கொண்ட கால அளவை விட, இம்முறை அமைத்த அலுவலர் குழு தான் மிகக் குறைந்த கால அவகாசத்தில் அறிக்கை அளித்து, ஊதிய விகிதங்களில் மாற்றங்களை விரைவாக கொண்டு வர வழி வகுத்துள்ளது. இப்பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு விரிவாக ஆய்வு செய்து, இன்று (11.10.2017) எனது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அதனை முழுமையாக ஏற்றுக்கொண்டு, அவற்றை செயல்படுத்துவதற்கான அரசாணைகளை உடனடியாக பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளேன். | DOWNLOAD
அரசு ஊழியர்களின் 7-வது ஊதியக்குழு தொடர்பாக விவாதிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று காலை நடக்கிறது | 7-வது ஊழியக் குழு அரசாணை இன்றே வெளியாக வாய்ப்பு.
தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது | அரசு ஊழியர்களின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் தொடர்பாக விவாதிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று காலை நடக்கிறது. அமைச்சரவை மாற்றத்துக்குப் பிறகு நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும். இக்கூட்டத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் குறித்து அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவின் அறிக்கை குறித்து விவாதிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ஊதிய உயர்வு அளிப்பது குறித்து அமைச்சரவையில் இறுதி செய்யப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்படும் என தெரிகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 7-வது சம்பள உயர்வு தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் வழங்கும் வகையில் ஊதியக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதன் தலைவரான சண்முகம் கடந்த மாதம் 27-ந்தேதி ஊதியக்குழு பரிந்துரைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார். குழுவின் பரிந்துரைகளை அரசாணைகளாக வெளியிடும் பணிகள் நிதித்துறையில் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. பரிந்துரைகளை ஏற்பது தொடர்பான கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று நடக்கிறது. முதல்-அமைச்சருடன் நடைபெறும் இந்த கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள், நிதித்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு ஊதிய உயர்வு அளிப்பது குறித்து விளக்கி கூறுகிறார்கள். அதனை தொடர்ந்து நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் 7-வது ஊழியக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் அதற்கான அரசாணை இன்றே வெளியாக வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு 20 முதல் 25 சதவீதம் அளவில் சம்பள உயர்வு இருக்கும் என்று தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் 1-7-2017 முதல் நிலுவை தொகையை வழங்க முடிவு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
Tuesday, October 10, 2017
MARK REGISTER AND AUTO RANK GENERATOR FOR ALL CLASSES 6-12 DOWNLOAD | CREATED BY M.SENTHIL KUMAR B.T MATHS PUMS U.S.PATTI, NARIKUDI UNION VIRUDHUNAGAR DT CELL : 9843888479
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கடன் வழங்கும் அதிகாரி பணி | விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 21 | எழுத்துத் தேர்வு தினம்: நவம்பர் 25
யூனியன் வங்கியில் அதிகாரி ஆகலாம் | விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 21 | எழுத்துத் தேர்வு தினம்: நவம்பர் 25 எழுத்துத் தேர்வு மதிப்பெண்: 200 நேர்காணல் மதிப்பெண்: 50 மத்திய அரசின் பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கடன் வழங்கும் அதிகாரி (Credit Officer) பதவியில் 200 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலைப் பட்டப் படிப்பு முடித்தவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். தேவையான தகுதி குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் எனில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் அவசியம். சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., சி.எஃப்.ஏ. (Chartered Financial Analyst) உள்ளிட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அரசு அல்லது தனியார் வங்கியில் கடன் பிரிவில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கட்டாயம் வேண்டும். வயது வரம்பைப் பொறுத்தவரையில் குறைந்தபட்சம் 23 அதிகபட்சம் 32 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும், எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. என்ன கேட்பார்கள்? விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவர். ஆன்லைன் வழியிலான எழுத்துத் தேர்வில் ரீசனிங், அடிப்படைக் கணிதம், வங்கிப் பணி, ஆங்கிலம் ஆகிய 4 பகுதிகளில் இருந்து தலா 50 கேள்விகள் வீதம் மொத்தம் 200 வினாக்கள் அப்ஜெக்டிவ் முறையில் இடம்பெறும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் 'ஒரு காலியிடத்துக்கு 3 பேர்' என்ற விகிதாச்சார அடிப்படையில் நேர்காணலுக்கு அனுமதிக்கப்படுவர். இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் என்றால் 'ஒரு காலியிடத்துக்கு 5 பேர்'. நேர்காணலில் குறைந்தபட்சம் 25 மதிப்பெண் எடுக்க வேண்டும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் எனில் 22.5. நேர்காணலில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் எடுக்காதவர்கள், எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும் அவர்கள் பணிக்குத் தேர்வுசெய்யப்பட மாட்டார்கள். உரிய வயதுத் தகுதியும் பணி அனுபவமும் உடைய பட்டதாரிகள் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் இணையதளத்தைப் (www.unionbankofindia.co.in) பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக்கட்டணம், சம்பளம், பதவி உயர்வு வாய்ப்புகள் உள்ளிட்ட இதர விவரங்களை வங்கியின் இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.
தமிழகத்தில் நடந்த ‘நீட்’ தேர்வு போராட்டம் பற்றிய வழக்கை சுப்ரீம் கோர்ட்டு முடித்து வைப்பு.
தமிழகத்தில் நடந்த 'நீட்' தேர்வு போராட்டம் பற்றிய வழக்கை சுப்ரீம் கோர்ட்டு முடித்து வைத்தது | தமிழகத்தில் 'நீட்' தேர்வுக்கு எதிரான போராட்டங்களுக்கு தடை கோரும் வழக்கின் மீது தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு முடித்து வைத்தது. தமிழ்நாட்டில் 'நீட்' தேர்வுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் தொடர்பாக வக்கீல் ஜி.எஸ்.மணி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது குறித்து ஓய்வுபெற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஒருவரின் தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவேண்டும். சட்ட விரோதமான போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும்' என்று கூறி இருந்தார். இந்த வழக்கு கடந்த மாதம் 18-ந்தேதி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏஎம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, கோர்ட்டு உத்தரவின்படி தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் ஆஜர் ஆகி, இந்த போராட்டங்கள் தொடர்பாக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். பிரமாண பத்திரம் இதைத்தொடர்ந்து நீதிபதிகள், தமிழ்நாட்டில் போராட்டங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலைமை தொடர்பான விளக்கத்தை பிரமாண பத்திரம் மூலம் தலைமைச் செயலாளர் 2 வாரத்துக்குள் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர். நேற்று இந்த வழக்கு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமை செயலாளர் தரப்பில் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த இடைக்கால உத்தரவுக்கு இணங்க, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் நீட் தொடர்பான எந்த போராட்டத்துக்கும் அனுமதி வழங்கவில்லை என்றும் தற்போது தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீராக கட்டுப்பாட்டில் உள்ளது எனவும் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து, நீதிபதிகள் தமிழக அரசின் பிரமாண பத்திரத்தை ஏற்றுக்கொள்வதாக அறிவித்து வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
போக்குவரத்து, மின்வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ்
போக்குவரத்து, மின்வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் | தீபாவளி போனஸ் குறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் வகையில், 2016-17ம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத்தொகையை வழங்க உத்தரவிட்டுள்ளேன். திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ன்படி, போனஸ் பெற தகுதியான சம்பள உச்சவரம்பு 21 ஆயிரம் ரூபாய் என மத்திய அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் 10 ஆயிரம் ரூபாய் என இருந்த தகுதி வரம்பைத் தளர்வு செய்து அனைத்து சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் போனஸ் பெற வழிவகை செய்யப்பட்டது. அதைப்போலவே தற்போது 21 ஆயிரம் ரூபாய் என்ற சம்பள உச்சவரம்பை தளர்வு செய்து அனைத்து சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க உத்தரவிட்டுள்ளேன். போனஸ் கணக்கிட ஏற்கனவே 3,500 ரூபாய் என இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பு, திருத்திய போனஸ் சட்டம் 2015-ன்படி 7 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் 2016-17ம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணை உதவித்தொகையை கீழ்க்கண்டவாறு வழங்க உத்தரவிட்டுள்ளேன். * லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்த நிறுவனங்களின் ஒதுக்கக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 சதவீத போனஸ் மற்றும் 11.67 சதவீத கருணைத்தொகை என மொத்தம் 20 சதவீதம் வரை போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும். * நட்டம் அடைந்துள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 10 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும். தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்து கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு பாடநூல் கழகம் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு மொத்தம் 20 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும். கூட்டுறவு சங்கங்கள், அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு வனத்தோட்ட கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம், கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு அந்த நிறுவனங்கள் லாபம் ஈட்டியிருந்தால் 20 சதவீதமும், லாபம் ஈட்டவில்லை என்றால் 10 சதவீதமும் போனஸ் வழங்கப்படும். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 10 சதவீதமும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு சென்ற ஆண்டைப்போல 8.33 சதவீதமும் போனஸ் வழங்கப்படும். இதுதவிர தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 4 ஆயிரம் ரூபாயும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3 ஆயிரம் ரூபாயும், போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3 ஆயிரம் ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2,400 ரூபாயும் கருணைத்தொகையாக வழங்கப்படும். இதனால் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400-ம், அதிகபட்சம் ரூ.16,800-ம் பெறுவர். மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் பணிபுரியும் 3 லட்சத்து 69 ஆயிரத்து 610 தொழிலாளர்களுக்கு ரூ.489 கோடியே 26 லட்சம் போனசாக வழங்கப்படும். போனஸ் பெறும் தொழிலாளர்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாட வழிகிடைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் | 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தும் அம்சங்களுக்கான ஒப்புதலை அமைச்சரவை அளிக்கும் என தகவல்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் | 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தும் அம்சங்களுக்கான ஒப்புதலை அமைச்சரவை அளிக்கும் என தகவல் | முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை காலை அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. அரசியல் குழப்பம் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டிருந்த நிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் சில மாதங்களுக்கு முன்பு இணைந்தன. அதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சராகவும், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக பாண்டியராஜனும் தமிழக அரசின் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர். தமிழகத்தில் அரசியல் சூறாவளி வீசிவரும் சூழ்நிலையில், அரசின் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டு வருகின்றன. அரசை தி.மு.க. மற்றும் டி.டி.வி.தினகரன் அணியினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இதற்கிடையே அரசியல்ரீதியாக அமைச்சர்கள் சிலர் தெரிவிக்கும் கருத்துகளும், யார்-யார்? எந்த அணி என்ற குழப்பத்தை உருவாக்கிவிடு கிறது. 7-வது ஊதியக்குழு இந்த சூழ்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை (புதன்கிழமை) காலை 11.15 மணியளவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடுகிறது. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் பாண்டியராஜன் சேர்க்கப்பட்ட பிறகு நடக்கும் முதல் அமைச்சரவை கூட்டம் இதுவாகும். அரசியல் பரபரப்பு நிலவும் இந்த சூழ்நிலையில் கூடும் அமைச்சரவை கூட்டத்தில், மத்திய 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் அது தொடர்பாக அலுவலர் குழு அளித்த பரிந்துரைகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. அந்த பரிந்துரைகளை தமிழக அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்துவது தொடர்பாக இந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்படுவதாக தலைமைச் செயலக வட்டாரம் தெரிவித்தது. அறிவிப்பு அலுவலர் குழுவின் பரிந்துரைகளில் அமல்படுத்தும் அம்சங்களுக்கான ஒப்புதலை நாளை கூடும் அமைச்சரவை அளிக்கும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில், ஒப்புதல் பெற்ற பரிந்துரைகள் அனைத்தும் முதல்-அமைச்சரால் உடனடியாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
Monday, October 9, 2017
DIPLOMA IN NURSING ADMISSION NOTIFICATION | 2017-2018 ஆம் ஆண்டிற்கான செவிலியர் பட்டயப்படிப்பிற்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்ப விநியோகம் தொடங்க உள்ள நாள் 11.10.2017
DIPLOMA IN NURSING ADMISSION NOTIFICATION | 2017-2018 ஆம் ஆண்டிற்கான செவிலியர் பட்டயப்படிப்பிற்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்ப விநியோகம் தொடங்க உள்ள நாள் 11.10.2017 | விண்ணப்பம் பெற கடைசி நாள் 21.10.2017 | விண்ணப்பிக்க கடைசி நாள் 23.10.2017 | http://www.tnhealth.org/ | http://www.tnmedicalselection.org/ | DOWNLOAD
அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு
அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று தனி்யார் பள்ளி நிர்வாகங்களுக்கு பள்ளி இயக்குநர் ஆர்.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கை: மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அரசு உதவி பெறும் சி்றுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றவர்களைக்கொண்டு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆனால், அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில், ஆசிரியர் நியமனத்துக்கு தகுதித்தேர்வு கட்டாயமில்லை என்று நீதி்மன்றத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்ட நாளான 23.8.2010-க்குப் பிறகு அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டே ஆசிரியர் நியமனம் நடைபெற வேண்டும். அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் புதிதாக நியமிக்கப்படும் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் டெட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தனியார் சுயநிதி பள்ளிகளுக்கும் இந்த விதிமுறை பொருந்தும். எனவே, கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளும்போது, டெட் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு பட்டதா்ரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதா என்பதை ஆய்வுசெய்து உறுதிபடுத்த வேண்டும். மேலும், கடந்த ஆகஸ்டு 10-ம் தேதியிட்ட மத்திய அரசிதழில் (கெஜட்) சிறுபான்மை அல்லாத பள்ளிகளில் 31.3.2015-க்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் 4 ஆண்டுகளுக்குள் அதாவது 31.3.2019-க்குள் டெட் தேர்ச்சி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளில் டெ தேர்ச்சிபெற்றவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.
Walk-in Interview for one post of Consultant Entomology on Contractual Basis | ஆலோசகர் ( பூச்சியியல் கட்டுப்பாடு ) பணி | இந்திய அரசின் மண்டல சுகாதாரம் மற்றும் குடும்ப நல இயக்குனரகம் அறிவித்துள்ள ஆலோசகர் ( பூச்சியியல் கட்டுப்பாடு ) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
Walk-in Interview for one post of Consultant Entomology on Contractual Basis | ஆலோசகர் ( பூச்சியியல் கட்டுப்பாடு ) பணி | இந்திய அரசின் மண்டல சுகாதாரம் மற்றும் குடும்ப நல இயக்குனரகம் அறிவித்துள்ள ஆலோசகர் ( பூச்சியியல் கட்டுப்பாடு ) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | WWW.NVDCP.GOV.IN | National Vector Borne Disease Control Programme Directorate General of Health Services Ministry of Health & Family Welfare | Walk-in Interview for one post of Consultant Entomology on Contractual Basis at RoHFW, Chennai | DOWNLOAD
தமிழ் நாடு போட்டித்தேர்வுகள் பயிற்சி மையம் | TNPSC, SSC, RRB, IBPS போன்ற முகமைகள் நடத்தும் வேலை வாய்ப்புக்கான போட்டித்தேர்வில் கலந்துக்கொள்ளும் பொருட்டு கட்டணமில்லா பயிற்சிக்கு குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நாள் : 31.10.2017
தமிழ் நாடு போட்டித்தேர்வுகள் பயிற்சி மையம் | TNPSC, SSC, RRB, IBPS போன்ற முகமைகள் நடத்தும் வேலை வாய்ப்புக்கான போட்டித்தேர்வில் கலந்துக்கொள்ளும் பொருட்டு கட்டணமில்லா பயிற்சிக்கு குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நாள் : 31.10.2017 | WWW.CIVILSERVICECOACHING.COM | All India Civil Service Coaching Centre, Chennai-28 | 163/1, Kanchi , P.S.Kumarasamy Raja Salai ,R.A.Puram (Greenways Road), Chennai-600 028 PH : 24621475 ,24621909 E-mail: aicscc.gov@gmail.com
Sunday, October 8, 2017
நர்சிங், பிபார்ம் முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பின
நர்சிங், பிபார்ம் முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பின | பிஎஸ்சி நர்சிங், பிபார்ம் உள்ளிட்ட 9 பட்டப் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிந்தது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பின. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 796 இடங்கள் நிரம்பவில்லை. தமிழகத்தில் அரசு, தனியார் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளான பிஎஸ்சி நர்சிங், பிபார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி நோய் குறியியல்), பிஎஸ்சி ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பிஎஸ்சி ரேடியோதெரபி டெக்னாலஜி, பிஎஸ்சி கார்டியோ பல்மோனரி பெர்பியூசன் டெக்னாலஜி, பி.ஆப்டம், பிஓடி ஆகிய 9 பட்டப் படிப்புகள் உள்ளன. 16 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 538 இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 7,843 இடங்கள் உள்ளன. தனியார் கல்லூரிகளில் காலியிடம் இந்தப் படிப்புகளுக்கு 2017-18 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று நடந்த கடைசி நாள் கலந்தாய்வில் 230 மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கான அனுமதி கடிதத்தை பெற்றனர். முதல்கட்ட கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 538 இடங்களும் நிரம்பின. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 7,843 இடங்களில் 7,047 இடங்கள் நிரம்பின. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 796 இடங்கள் காலியாக உள்ளன. விரைவில் 2-ம் கட்டம் இது தொடர்பாக மருத்துவ மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு செயலாளர் ஜி.செல்வராஜிடம் கேட்டபோது, "முதல் கட்ட கலந்தாய்வு முடிவடைந்துள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். 2-ம் கட்ட கலந்தாய்வில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 796 இடங்கள் நிரப்பப்படும்" என்று தெரிவித்தார்.
Friday, October 6, 2017
TRB - POLYTECHNIC EXAM 2017 OFFICIAL KEY ANSWER PUBLISHED | TRB - அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு (DIRECT RECRUITMENT OF LECTURERS (ENGINEERING / NON-ENGINEERING) IN GOVT. POLYTECHNIC COLLEGES 2017 - 18) உத்தேச விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
TRB - POLYTECHNIC EXAM 2017 OFFICIAL KEY ANSWER PUBLISHED | TRB - அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு (DIRECT RECRUITMENT OF LECTURERS (ENGINEERING / NON-ENGINEERING) IN GOVT. POLYTECHNIC COLLEGES 2017 - 18) உத்தேச விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு பாலிடெக்னிக் கல்லுhரி விரிவுரையாளர் பணியிடங்களுக்கான நேரடி பணித்தெரிவிற்கான போட்டி எழுத்துத்தேர்வு 16.09.2017 அன்று நடத்தப்பட்டு 1,33,567 தேர்வர்கள் தேர்வு எழுதினார்கள். தற்போது அரசு பாலிடெக்னிக் கல்லுhரி விரிவுரையாளர் போட்டி எழுத்து தேர்வுக்கான கேள்வித்தாட்களுக்கு, உரிய தற்காலிக விடைக்குறிப்புகள் ((Tentative Key Answer) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic.in ல் வெளியிடப்பட்டு உள்ளன. ஏற்கனவே தேர்வுக்கான அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக விடைக்குறிப்பின் மீது தேர்வர்கள் ஏதேனும் ஆட்சேபனை தெரிவிக்க விரும்பினால் 12.10.2017 மாலை 5.30 மணிக்குள் ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் மையத்தில் உள்ள பெட்டியிலோ அல்லது மேற்கண்ட நாட்களுக்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பெறும் வகையில் அஞ்சல் மூலமாகவோ ஒவ்வொரு விடைக்கும் தனித்தனியாக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள உரிய படிவத்தில் ஆதாரங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும். ஒவ்வொரு வினாவிற்கும் தவறாமல் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் / மேற்கோள் புத்தகங்கள் (Standard Text Books / Reference Books) ஆதாரம் மட்டுமே அளிக்கவேண்டும். கையேடுகள் மற்றும் தொலைதூர கல்வி நிறுவன ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. NEXT DOWNLOAD KEY
தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு, 20 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசு ஊழியருக்கு 20 சதவீத சம்பள உயர்வு? தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு, 20 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பு, தீபாவளிக்கு முன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு, சட்டசபை தேர்தலின்போது, 'மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப் பட்டதும்,தமிழக அரசுஊழியர்களுக்கும் மாற்றி அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என, ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி பிப்., 22ல் ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க அலுவலர் குழு அமைத்து, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.குழு அறிக்கை அடிப்படையில், அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 20 சதவீதம் சம்பள உயர்வு வழங்க, அரசுமுடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணை அடுத்த வாரம் வெளியாகும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.