ஜன.5-ம் தேதி முதல் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு

ஜன.5-ம் தேதி முதல் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு | தமிழகத்தில் 1.84 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி ஜனவரி 5-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் பரிசுத் தொகுப்பு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டும், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றுடன் 2 அடிநீள கரும்பு என பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை முதல்வர் பழனிசாமி நேற்று அறிவித்தார். இதை யடுத்து, கரும்பு கொள்முதல் பணியை கூட்டுறவுத் துறை தொடங்கியுள்ளது. மேலும், முந்திரி, திராட்சை ஆகியவை தலா 20 கிராம் மற்றும் குறிப்பிட்ட அளவு ஏலக்காய் ஆகியவற்றை சிறிய பாக்கெட்களில் அடைக்கும் பணியும் கூட்டுறவுத் துறையில் தொடங்கப்பட்டுள்ளது. ஜனவரி 5-ம் தேதி முதல் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைக்கிறார். 6-ம் தேதி முதல் மாவட்டங்களில் அமைச்சர்கள் இத்திட்டத்தை தொடங்கி வைக்கின்றனர். பொங்கலுக்கு முன் 1.84 கோடி குடும்ப அட்டைகளுக்கும் பொருட்களை வழங்க வேண்டும் என்று நியாயவிலைக் கடைகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

Comments