ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக ‘வெயிட்டேஜ்’ முறை மாற்றம்

ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக 'வெயிட்டேஜ்' முறை என்பது 2013-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து அதில் ஏதோ ஒரு குறைபாடு இருந்து வருகிறது. இதுகுறித்து நானும், துறை செயலாளரும் முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்ல உள்ளோம். அதன்பிறகு அதில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரலாம்? என்பது குறித்து கூறுவோம். இதுகுறித்து ஆசிரியர்கள் தரப்பிலும் ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார்கள். அதன்மீதும் நிச்சயம் பரிசீலனை செய்யப்படும். பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமன தேர்வில் சிறிய அளவில் குறைபாடு நிகழ்ந்திருக்கிறது. மற்றபடி பெரிய அளவில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. தவறு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. குறைபாடு குறித்து 'எல்காட்' நிறுவனத்திடம் இருந்து விளக்கம் கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் உடன் இருந்தார்.

Comments