தட்கல் முறையில் தனித்தேர்வர்கள் பிளஸ்-1 தேர்வுக்கு ஜனவரி 17-ந் தேதி முதல் 19 வரை விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

தட்கல் முறையில் தனித்தேர்வர்கள் பிளஸ்-1 தேர்வுக்கு 17-ந் தேதி முதல் 19 வரை விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு | பிளஸ்-1 பொதுத் தேர்வு வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுத தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கத் தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் இணையதளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தனித்தேர்வர்கள் இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்காக ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அரசுத் தேர்வுத் துறை சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தனித்தேர்வர்கள் தாங்கள் எந்த கல்வி மாவட்டத்திலிருந்து விண்ணப்பிக்கிறார்களோ, அந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையத்திற்கு வருகிற 2018 ஜனவரி 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரையிலான நாட்களில் நேரில் சென்று இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களின் விவரத்தை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Comments