10 ரூபாய் நாணயங்கள் செல்லும் ரிசர்வ் வங்கி மீண்டும் அறிவிப்பு

10 ரூபாய் நாணயங்கள் செல்லும் ரிசர்வ் வங்கி மீண்டும் அறிவிப்பு | வெவ்வேறு விதமான வடிவமைப்பில் 10 ரூபாய் நாணயங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதனால் பெரும்பாலான வியாபாரிகளும், பொதுமக்களும் அவை செல்லாதோ என்ற சந்தேகத்தில் இந்த நாணயங்களை வாங்க மறுக்கிறார்கள். 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என்று ரிசர்வ் வங்கி பல முறை அறிவித்தும் பலர் வாங்க மறுக்கிறார்கள். இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், '10 ரூபாய் நாணயங்களின் உண்மைத்தன்மை குறித்து வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் உள்ளதாகவும், அவற்றை பெற தயக்கம் காட்டுவதாகவும் எங்களது கவனத்திற்கு தெரியவந்துள்ளது. அரசின் பல்வேறு திட்டங்களை பிரதிபலிக்கும் வகையிலும், சமூக, கலாசார மதிப்புகள் அடிப்படையிலும் அவ்வப்போது புதிய வடிவமைப்பில் 10 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்படுகின்றன. இவ்வாறு ரிசர்வ் வங்கியால் 14 வகையான நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. இவை அனைத்தும் சட்டப்பூர்வமாக செல்லத்தக்கவை. வங்கிகள் 10 ரூபாய் நாணயங்களை பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment