Breaking News

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1017 காலியிடங்கள்

பள்ளிகளில் 1017 காலியிடங்கள் | மத்திய கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில் ஒன்று கேந்திரிய வித்யாலயா சங்கேதன். தற்போது இந்த அமைப்பின் கீழ் செயல்படும் பள்ளிகளில் டெபுடி கமிஷனர், அசிஸ்டன்ட் கமிஷனர், அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபீசர், நிதி அதிகாரி, உதவி பொறியாளர், லோயர் டிவிஷன் கிளார்க், நூலகர், ஸ்டெனோகிராபர் போன்ற கற்பித்தல் சாராத பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 1017 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. முதுநிலை பட்டப்படிப்புடன், பி.யெட் படித்தவர்கள், பட்டப்படிப்பு படித்தவர்கள், பி.காம், எம்.காம், சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., எம்.பி.ஏ. படித்தவர்கள், எலக்ட்ரிக்கல், டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் ஆகியோருக்கு பணிகள் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பும், கல்வித்தகுதியும் வேறுபடுகிறது. எனவே அந்தந்த பணிக்கான சரியான வயது வரம்பு கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம். எழுத்துத் தேர்வு, கணினித் தேர்வு, திறமைத் தேர்வு, தட்டச்சுத் தேர்வு, மற்றும் நேர்காணல் ஆகியவற்றில் பணிக்கு அவசியமான தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.750 கட்டணம் செலுத்தி, இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 11-1-2018-ந் தேதியாகும் இது பற்றிய விரிவான விவரங்களை www.kvsangathan.nic.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

No comments