சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு உடற்கல்வி தேர்வு தேதி மாற்றம்

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு உடற்கல்வி தேர்வு தேதி மாற்றம் | மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 5 முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரையும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 5 முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரையும் நடைபெற உள்ளது. இதற்கான தேர்வுக்கால அட்டவணையை சிபிஎஸ்இ கடந்த வாரம் வெளியிட்டது. இந்த நிலையில், 12-ம் வகுப்பு உடற்கல்வி தேர்வு தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த உடற்கல்வி தேர்வானது ஏப்ரல் 13-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும். மற்ற பாடங்களுக்கான தேர்வுகளும் 10-ம் வகுப்பு தேர்வுகளும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நாளில் நடைபெறும். இத்தகவலை சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கே.கே.சவுத்ரி தெரிவித்துள்ளார்.

Comments