இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு உரிய வழிகாட்டுதல் இல்லாததால் தவிக்கும் ஆசிரியர்கள் வினா-வங்கி வெளியிட முடியாத நிலையில் பெற்றோர் ஆசிரியர் கழகம்

இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு உரிய வழிகாட்டுதல் இல்லாததால் தவிக்கும் ஆசிரியர்கள் வினா-வங்கி வெளியிட முடியாத நிலையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் | பிளஸ் 1 பொதுத்தேர்வை இந்த ஆண்டு மாணவர்கள் எதிர்கொள்ளப் போகும் நிலையில், பாடப்பகுதி வாரியாக இடம்பெறும் வினாக்கள் குறித்த புளு பிரின்ட் இல்லாமல் மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். 10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவது போல் இந்த ஆண்டிலிருந்து பிளஸ் 1 வகுப்புக்கும் மாநில அளவில் பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து மேல்நிலைக் கல்வியில் தேர்வுமுறை மற்றும் மதிப்பெண் முறையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, பிளஸ் 1 தேர்வுக்கு 600 மதிப்பெண்ணும், பிளஸ் 2 தேர்வுக்கு 600 மதிப்பெண்ணும் என இரண்டு ஆண்டுகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கும் வண்ணம் மொத்தம் 1,200 மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளன. கடந்த ஆண்டு வரை மேல்நிலைக் கல்வியில் பிளஸ் 2-வில் மட்டுமே பொதுத்தேர்வு இருந்ததால் தேர்வில் 1,200 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதுவரை செய்முறைத் தேர்வு உள்ள பாடங்களுக்கு 150 மதிப்பெண்ணுக்கு தேர்வு எழுதி வந்த மாணவர்கள் இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 70 மதிப்பெண்ணுக்கு மட்டுமே தேர்வு எழுத வேண்டும். செய்முறைத் தேர்வு மற்றும் அக மதிப்பீட்டுக்கு 30 மதிப்பெண். செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களுக்கு 200 மதிப்பெண்ணுக்கு தேர்வு எழுதி வந்த மாணவர்கள் ஆண்டுக்கு 90 மதிப்பெண்ணுக்கு மட்டுமே தேர்வு எழுத வேண்டும். அக மதிப்பீட்டுக்கு 10 மதிப்பெண். அக மதிப்பீடு அக மதிப்பீட்டில் வருகைப்பதிவு, புராஜெக்ட், களப் பயணம் என ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட மதிப்பெண் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்லூரிப் படிப்பின் இறுதியில் செமஸ்டர் தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுவதைப் போன்று பிளஸ் 2 தேர்வு முடிந்ததும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட இருக்கிறது. பிளஸ் 1 பொதுத்தேர்வாக மாற்றப்பட்டதுடன் வினா அமைப்பு, வினாத் தாள் முறை, விடைத்தாள் மதிப்பீட்டு முறை, அக மதிப்பீடு, வருகைப்பதிவு, புராஜெக்ட், களப் பயணம் ஆகியவற்றுக்கு மதிப்பெண் என பல்வேறு புதிய மாற்றங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. | DOWNLOAD

Comments