வருமான வரி விலக்கு ரூ.3 லட்சமாக உயரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

`வருமான வரி விலக்கு ரூ.3 லட்சமாக உயரலாம்` | வருமான வரி விலக்கு ரூ.3 லட்சமாக உயரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 2018-19-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில் பட்ஜெட் அறிவிப்பு நடுத்தர வருமான பிரிவினருக்கு சாதகமாக இருக்கும் என்று நிதியமைச்சகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாவது, வருகிற பட்ஜெட் அறிவிப்பில் தனிநபர் வருமான உச்ச வரம்பில் மாற்றங்கள் இருக்கலாம். குறிப்பாக தனிநபர் வருமான வரி விலக்கு தற்போது ரூ.2.50 லட்சம் என்கிற நிலையிலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆனால் ரூ.5 லட்சம் வரை எதிர்பார்க்கத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த குறைந்தபட்ச விலக்கு நடுத்தர வருமான பிரிவினருக்கு மிகப் பெரிய வாய்ப்பாக இருக்கும். குறிப்பாக மாதச் சம்பளதாரர்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும். இந்த நடவடிக்கை சில்லரை பணவீக்கத்தில் உருவாகும் ஏற்ற இறக்கங்களை கட்டுப்படுத்தவும் உதவும். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் வருமான வரி வரம்பில் நிதியமைச்சர் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் தனிநபர்களின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை இருந்தால் அதற் கான 10 சதவீத வரியை 5 சதவீதமாகக் குறைத்திருந்தார். இந்த நிலையில் வரும் பட்ஜெட்டில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு குறைந்தபட்ச வரியாக 10 சதவீத வரி விதிக்கவும், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை 20 சதவீதம், ரூ.20 லட்சத்துக்கு மேல் 30 சதவீத வரி விதிக்கவும் வாய்ப்புள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். -பிடிஐ

Comments