தேர்ச்சி பெறாத முன்னாள் மாணவர்கள் பாலிடெக்னிக் தேர்வு எழுத மீண்டும் வாய்ப்பு

தேர்ச்சி பெறாத முன்னாள் மாணவர்கள் பாலிடெக்னிக் தேர்வு எழுத மீண்டும் வாய்ப்பு | பாலிடெக்னிக் தேர்வில் சில பாடங்களில் தேர்ச்சி பெறாத முன்னாள் மாணவர்களுக்கு சிறப்பு கருணை அடிப்படையில் தொழில்நுட்ப கல்வித்துறை கீழ் வருகிற ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாத பட்டயத்தேர்வை மீண்டும் எழுத வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 2010 வரை முழு நேர 3 வருடம், 3½ வருடம் மற்றும் 2009 வரை 4 வருட பகுதி நேர பட்டயப்படிப்பில் சேர்ந்த அனைவரும் இத்திட்டத்தின்படி தேர்வு எழுதலாம். தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.500 தேர்வு கட்டணமாகவும் ரூ.30 மதிப்பெண் பட்டியல் கட்டணமாகவும், ரூ.25 பதிவு கட்டணமாகவும் தாங்கள் பயின்ற கல்லூரி முதல்வர் மூலமாக செலுத்த வேண்டும். அபராதம் இன்றி செலுத்த கடைசி நாள் பிப்ரவரி 7-ந் தேதியும், ரூ.100 அபராதத்துடன் செலுத்த கடைசி நாள் 14-ந் தேதியும், தட்கல் முறையில் ரூ.500 அபராதத்துடன் செலுத்த கடைசி நாள் மார்ச் 9-ந் தேதியும் ஆகும். இத்தகவலை தொழில்நுட்ப கல்வி ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Comments