பள்ளிகள், கல்லூரிகள் இன்று செயல்படும் அதிகாரிகள் தகவல்

பள்ளிகள், கல்லூரிகள் இன்று செயல்படும் அதிகாரிகள் தகவல் | பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என்று வாட்ஸ் அப்பில் செய்தி பரவியது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டை முன்னிட்டு விடுமுறை விடப்பட்டு இருப்பதாக அதில் கூறப்பட்டு இருந்தது. அரசு தரப்பில் இது பற்றி விசாரித்தபோது, கடந்த ஆண்டு வெளியான வாட்ஸ் அப் தகவலை யாரோ பரப்பி இருப்பதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் கூறுகையில், தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) வழக்கம் போல பள்ளிகள் அனைத்தும் இயங்கும் என்று தெரிவித்தார். அதுபோல உயர் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், கல்லூரிகள் இன்று வழக்கம் போல செயல்படும் என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment