சி.ஐ.எஸ்.எஃப்-ல் பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

சி.ஐ.எஸ்.எஃப்-ல் பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் மத்திய தொழில் பாதுகாப்புப் படையில், விளையாட்டுப் பிரிவின்கீழ் எஸ்ஐ, தலைமைக் காவலர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மத்திய தொழில் பாதுகாப்புப் படையில், 31 எஸ்ஐ பணியிடங்கள் மற்றும் 87 தலைமைக் காவலர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தடகளம், குத்துச்சண்டை, கைப்பந்து, கால்பந்து, ஜூடோ, ஹாக்கி, நீச்சல், பளு தூக்குதல் உள்ளிட்ட 12 விளையாட்டு பிரிவுகளின்கீழ் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். எஸ்ஐ பணிக்கு பட்டப் படிப்பில் தேர்ச்சியும், தலைமைக் காவலர் பணிக்கு பிளஸ் டூவில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். வரும் 25-ம் தேதியன்று எஸ்ஐ பணிக்கு வயது வரம்பு 20 முதல் 25 வயதுக்குள்ளும், தலைமைக் காவலர் பணிக்கு 18 வயது முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும். கடைசி தேதி பிப்.2 உடற்தகுதி மற்றும் எழுத்துத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப பிப்ரவரி 2-ம் தேதி கடைசி தேதியாகும். கூடுதல் விவரங்களை https://cisfrectt.in என்ற இணையதளத்தில் இருந்து அறியலாம்.

Comments