யூனியன் பேங்க் ஆப் இந்தியா சிறப்பு அதிகாரி பணிகளுக்கான ஆட்தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வங்கியில் அதிகாரி பணியிடங்கள் | யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பிரபல பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். தற்போது இந்த வங்கியில் 2017-2018 ஆண்டுக்கான சிறப்பு அதிகாரி பணிகளுக்கான ஆட்தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாரெக்ஸ் அதிகாரி மற்றும் இன்டகரெட்டடு டிரெஸரி அதிகாரி ஆகிய கிரேடு-2 பணிகளுக்கு தலா 50 பணியிடங்கள் வீதம் மொத்தம் 100 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணியிடங்களில் உள்ள இடஒதுக்கீட்டு விவரத்தை இணையதளத்தில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 23 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 32 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். டிரெஸ்ஸரி அதிகாரி பணிக்கு 35 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பாரெக்ஸ் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம். முதுநிலை படிப்புடன், நிதி, கணிதம், புள்ளியியல், வணிகம் போன்ற பிரிவுகளில் முதுநிலை படிப்பு படித்தவர்கள் டிரெஸ்ஸரி அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம். எம்.பி.ஏ. படிப்புடன், பிஸினஸ்மேனேஜ்மென்ட், நிதி பிரிவில் டிப்ளமோ படித்திருந்தால் இரு பணிகளுக்கும் சிறப்பு தகுதியாக கருதப்படும். எம்.எஸ்.எக்செலில் பணியாற்றும் திறன் பெற்றிருப்பதும் அவசியம். ஆன்லைன் தேர்வு, குழு கலந்துரையாடல் அல்லது நேர் காணல் ஆகிய தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 13-1-2018 அன்று இதற்கான விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாளாகும். இதற்கான தேர்வு 9-2-2018 அன்று நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.unionbankofindia.co.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

Comments