வரலாறு அறிவோமா? இன்று போனஸ் குறித்து அரசு ஊழியர்களுக்கு ஒரு அரசாணை வழங்கப்பட்டு அது "அ" மற்றும் "ஆ" பிரிவு ஊழியர்களுக்கு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரலாறு அறிவோமா? இன்று போனஸ் குறித்து அரசு ஊழியர்களுக்கு ஒரு அரசாணை வழங்கப்பட்டு அது "அ" மற்றும் "ஆ" பிரிவு ஊழியர்களுக்கு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாத ஊதியம் போனஸ் என கேட்டு வஞ்சிக்கப்பட்ட நிலையில் அரசு ஊழியர் சங்கம் போராட்டத்தை அறிவித்து இன்று நடத்தியும் இருக்கிறது.. நாளை இது நீதி மன்றத்தில் கேள்விக்கோ கேலிக்கோ உள்ளாகும் முன் அரசு ஊழியர்களும் அன்றாடம் செய்திகளை கவணிக்கும் பொது மக்களும் இது குறித்து அறிந்து கொள்ளவேண்டும்... இவர்கள் என்ன வேலை செய்து அரசுக்கு லாபம் கொடுத்தார்கள் போனஸ் கேட்க்க என சில நடுநிலை(?)வாதிகள் நாளைக்கு கேள்விக்கனை தொடுத்து அரசிடம் விசுவாசம் காட்டி பல்லிளித்து நிற்பார்கள் . அவர்களுக்கும் சேர்த்தே இந்த பதிவு... பொங்கல் போனஸ் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டு அரசாணையில் கருணைத்தொகை என விளிக்கப்படும் இதன் பெயர் கொடுபடா ஊதியம்... அது என்ன கொடுபடா ஊதியம்? ஆம். ஒரு காலத்தில் அரசு ஊழியர்களுக்கு இன்றைய கூலித்தொழிலாளிக்கு வழங்குவது போலவே வாரச்சம்பள முறை தான் இருந்தது. வாரா வாரம் சம்பளம் கொடுப்பதில் இருந்த நிர்வாக சிரமத்தை தணிக்க அரசு ஒரு முடிவிற்கு வந்தது. வாரச்சம்பளத்தை மாதச்சம்பளமாக்க முடிவு செய்த அரசாங்கம் அதற்காக ஒரு மாதத்திற்கு நான்கு வாரம் என கணக்கிட்டு நான்கு வார சம்பளத்தை தொகுத்து ஒரு மாத சம்பளமாக வழங்கியது.. அட கணக்கு சரிதானே என குமாரசாமி கணக்கு போடும் மரசுத்தியல்களும் டுபாக்கூர் சமூக ஆர்வலர்களும் தொடையை தட்டிவிட்டீர்களா? உங்களால் தான் இந்த நாடும் மக்களும் நாசமாய் போகிறது. ஒரு மாதத்திற்கு நான்கு வார சம்பளம் என்றால் பனிரெண்டு மாதத்திற்கு (12×4= 48 ) நாற்பத்தெட்டு வார சம்பளம் தானே கணக்கில் வருது ... வருசத்துக்கு 52 வாரந்தானே சமூக ஆர்வலரே! அப்போது அந்த நாலு வார ஊதியம்? அதைத்தான் கொடுபடா ஊதியமாக அரசு, அரசு ஊழியருக்கு வழங்கியது... அது தான் இன்றைய அரசு ஊழியர் சங்க கோரிக்கை ... உச்ச வரம்பின்றி ஒரு மாத போனஸ்... ஆனால் கொடுபடா ஊதியம் எப்படி போனஸ் ஆகி கருணைத்தொகை ஆனது.... அதில் தான் போக்குவரத்து ஊழியர் சேமிப்பு கணக்கு தொகையில் பஸ்ஸுக்கு பல்ப்பு வாங்கி ஏமாற்றும் விசயபாசுக்கர் அரசின் சூழ்ச்சியும் கிரிசா வைத்தி,சண்முகம் வகையரா சதிகள்... எங்களுக்கு கொடுக்கப்படாத ஊதியத்தினை போனஸ் என்று அறிவித்து கருணைத்தொகை என மறுத்திருக்கும் அரசுக்கு சால்ரா போடும் அம்பானிகளுக்கும்... இதனை அறியாமல் கருணைத்தொகை தானே கொடுத்தத கொடுக்கட்டும் என கோப்புகளுக்குள் மூழ்கும் அரசு ஊழியர் சமூகத்திற்கும்... இது செய்தி அல்ல வரலாற்று பாடம்

Comments