CURRENT AFFAIRS 2018-01-6-12 | கடந்து வந்த பாதை | 2018 ஜனவரி 6- 12 | முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு

 • கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத்துக்கு மூன்றரை ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ. 10 லட்சம் அபராதமும் விதித்து ராஞ்சி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு உத்தரவிட்டது. (ஜனவரி 6)
 • காஷ்மீரில் பயங்கரவாதிகளின் குண்டுவெடிப்பில் சிக்கி 4 போலீசார் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்துக்கு முதல்-மந்திரி மெகபூபா முப்தி கடும் கண்டனம் தெரிவித்தார். (ஜனவரி 6)
 • நடப்பு 2017- 2018-ம் நிதியாண்டில் நாட்டின் நிதிப் பற்றாக்குறை 3.5 சதவீதமாக அதிகரிக்கும் என டீ.பி.எஸ். வங்கி தெரிவித்தது. (ஜனவரி 6)
 • சவுதி அரேபியாவில் அரண்மனையின் முன் போராட்டம் நடத்த முயன்றதாக 11 இளவரசர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். (ஜனவரி 6)
 • மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் ஜமாத் உத் தவா உள்ளிட்ட 72 பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்கத் தடை விதித்து பாகிஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்தது. (ஜனவரி 7)
 • தமிழக சட்டசபையில் ஆண்டில் முதல் கூட்டத்தில் உரையாற்றிய கவர்னர் பன்வாரிலால் புரோகித், ஊதிய திருத்தக் கோரிக்கை களைப் பரிசீலிக்கக் குழு அமைக்கப்படும், பெண்கள் இரு சக்கர வாகனம் வாங்க வழங்கப்படும் மானியத் தொகை ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார். (ஜனவரி 8)
 • இந்தியாவில் நடப்பு 2018-ம் ஆண்டில் நிறுவனங்கள் கைமாறும் மதிப்பு 5 ஆயிரம் கோடி டாலராக அதிகரிக்கும் என ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது. (ஜனவரி 8)
 • கேப்டவுனில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. (ஜனவரி 8)
 • இந்த ஆண்டுக்கான 'கோல்டன் குளோப்' விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த டி.வி. தொடர் நடிகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அசிஸ் அன்சாரி தேர்வு செய்யப்பட்டார். (ஜனவரி 8)
 • தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் தீவிரம் அடைந்ததற்கான காரணம் குறித்து மத்தியக் குழு அறிக்கையாக மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. (ஜனவரி 9)
 • சினிமா தியேட்டர்களில் தேசிய கீதத்தை ஒலிக்கவிடுவது கட்டாயம் அல்ல என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. (ஜனவரி 9)
 • நடப்பு வேளாண் பருவத்தில் (2017 ஜூலை- 2018 ஜூன்) நாட்டின் கோதுமை உற்பத்தி 10 கோடி டன்னை எட்டும் என மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்தது. (ஜனவரி 9)
 • தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை நடந்தது. அதில், தென்கொரியாவில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள வடகொரியா முன்வந்தது. (ஜனவரி 9)
 • டெல்லியில் இந்திய வம்சாவளி எம்.பி.க்களின் முதல் மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'அன்னிய நிலத்தை ஆக்கிரமிக்கும் எண்ணம் இந்தியாவுக்குக் கிடையாது' என்று கூறினார். (ஜனவரி 9)
 • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'இஸ்ரோ'வின் புதிய தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி கே. சிவன் நியமிக்கப்பட்டார். (ஜனவரி 10)
 • சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் 41-வது சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்கியது. அமைச்சர் செங்கோட்டையன் புத்தகக் கண்காட்சியைத் திறந்துவைத்து அரங்குகளைப் பார்வையிட்டார். (ஜனவரி 10)
 • ஒற்றை பிராண்ட் சில்லரை வர்த்தகம், கட்டுமானத் துறைகளில் 100 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. (ஜனவரி 10)
 • தனிநபர் ரகசியத்தைப் பாதுகாக்கும் வகையில் ஆதார் அட்டைக்குப் பதிலாக புதிய அடையாள அட்டை முறை அறிமுகப் படுத்தப்பட்டது. இதை வருகிற மார்ச் 1-ம் தேதி முதல் நடை முறைக்குக் கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டது. (ஜனவரி 10)
 • அடுத்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என்றும், அடுத்த 2 ஆண்டுகளில் இது 7.5 சதவீதத்தை எட்டும் என்றும் உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. (ஜனவரி 10)
 • அமெரிக்காவில் சிறுவயதில் சட்டவிரோதமாகக் குடியேறிய 8 லட்சம் பேரை வெளியேற்ற ஜனாதிபதி டிரம்ப் எடுத்த நடவடிக்கைக்கு கோர்ட்டு தடை விதித்தது. (ஜனவரி 10)
 • 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டப்பட்டதன் பொன்விழா ஆண்டு சென்னையிலும் மாவட்டங்களிலும் ஜனவரி 14-ம் தேதி முதல் கொண்டாடப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். (ஜனவரி 11)
 • வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாகக் குற்றஞ்சாட்டி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மூத்த நீதிபதிகள் குரியன் ஜோசப், செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி. லோகுர் ஆகியோர் பேட்டி அளித்தனர். (ஜனவரி 12)
 • முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக எந்தவிதப் பேரிடரையும் எதிர்கொள்ளும் வகையில் சிறப்புக் குழுக்களை அமைக்குமாறு தமிழகம், கேரளா மாநிலங்கள் மற்றும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது. (ஜனவரி 11)
 • 8 நாட்களாக நடைபெற்றுவந்த பஸ் தொழிலாளர் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. (ஜனவரி 11)
 • உள்நாட்டில் டிசம்பர் மாதத்தில் கார் உள்ளிட்ட பயணிகள் வாகனங்கள் விற்பனை 5.22 சதவீதம் அதிகரித்துள்ளது என இந்திய மோட்டார் வாகனங்கள் தயாரிப்பாளர்கள் சங்கம் (சியாம்) தெரிவித்தது. (ஜனவரி 11)
 • ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட் ஏவப்பட்டது. இதன் மூலம், இந்தியாவின் 100-வது செயற்கைக்கோளான கார்ட்டோசாட்-2 உள்பட பல்வேறு நாடுகளின் 31 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. (ஜனவரி 12)
 • இந்த நிதியாண்டில் அரசுக்கு ஏற்பட்ட கூடுதல் செலவினங் களுக்காக ரூ. 6,522.03 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய முதல் துணை மதிப்பீட்டை துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டசபையில் தாக்கல் செய்தார். (ஜனவரி 12)

No comments:

Post a Comment