தொழில் நல்லுறவு விருது பிப். 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்


தொழில் நல்லுறவு விருது பிப். 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் | தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் 2015-16-ம் ஆண்டுக்கான தொழில் நல்லுறவு விருது பெற பிப்ரவரி 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தொழிலாளர் நலத் துறை ஆணையர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஆணையரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதி, நல்ல தொழில் உறவு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் தொழில் நல்லுறவு பரிசுத் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நல்ல தொழில் உறவை பேணிக் காக்கும் வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு 2015-16-ம் ஆண்டுக்கான சிறப்பு விருதுகளை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் முத்தரப்புக் குழு தேர்வு செய்யும். இதற்கான விண்ணப்பத்தை, www.labour.tn.gov.in/labour என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். அல்லது அந்தந்த மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் அலுவலர் அலுவலகம், உதவி ஆணையர் அலுவலகம், வட்டார தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகங்கள், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் அலுவலகங்கள் மற்றும் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திலும் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், விண்ணப்பக் கட்டணம் செலுத்திய விவரத்தை இணைத்து, சென்னை தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். ஜனவரி 21-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இதற்கான கால அவகாசம் பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  DOWNLOAD - FIND YOUR NEEDS HERE

Comments