KALVISOLAI TNPSC

Wednesday, 28 February 2018

கணினி அறிவியல் பாடத்தை 6வது தனி பாடமாக 6முதல் 10ம் வகுப்பு வரை கொண்டுவர நடவடிக்கை எடுக்க கோரிக்கை


இனிமேலாவது தமிழக அரசு கணினி அறிவியல் பாடத்தை 6வது தனி பாடமாக 6முதல் 10ம் வகுப்பு வரை கொண்டுவர நடவடிக்கை எடுக்குமா? மற்ற மாநிலங்களை காட்டிலும், இந்தியா அளவில் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் பின் தங்கியே உள்ளனர். NCERT மூலமாக நடத்தப்பட்ட NAS (National Assessment Survey) ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தமிழக அரசு பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாகவும் மற்ற மாநில மாணவர்களுக்கு முன்னோடியாகவும் இந்தியாவில் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் முதல் இடம் பிடிக்கவும் கணினி வழிக்கல்வி கற்றல் அவசியம். மற்ற மாநிலத்தில் உள்ளதை போல் கணினி அறிவியல் பாடத்தை 6வது தனி பாடமாக 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கொண்டுவரவேண்டும். அப்போது தான் தமிழகம் கல்வியில் முதல் மாநிலமாக தலைசிறந்து விளங்கும். 1834-ல் மெக்காலே இந்தியா வந்தார். அவருடன் ஆலோசனை நடத்திய கவர்னர் ஜெனரல் பெண்டிங் பிரபு. இந்தியக் கல்விக்கு - பொதுக் கற்பித்தல் முறை எனப் பெயரிட்டு, அவரையே அதன் தலைவராக்கினார். எண்ணத்திலும் அறிவாற்றலிலும் கலாச்சாரத்திலும் ஆங்கிலேயராகவும் ஆனால், ரத்தத்திலும் நிறத்திலும் இந்தியராகவும் இருக்கும் ஒருவரை உருவாக்குவதே கல்வியின் நோக்கம் என அறிவித்த மெக்காலே, 267 பக்கம் கொண்ட கல்விக் கருத்துருவை அரசுக்குச் சமர்ப்பித்தார். ஆங்கிலக் கல்வியை முழுதும் வேலையாள் தகுதி பெறும் கல்வியாக மாற்றினார். பிராந்திய மொழிகளில் புத்தகங்கள் அச்சிடுவதைக்கூடத் தடை செய்தார். "வியாபார, நிர்வாக மொழியாய் ஆங்கிலம்; அதற்காக பிரிட்டிஷ் அரசுக்குத் தேவைப்படும் லட்சக்கணக்கான - கணக்காளர், எழுத்தர் வேலைக்கான கல்வி ஆகியவை போதுமானவை. பெரிய மேதாவிகள், தத்துவ அறிஞர்கள் எல்லாம் நமக்கு எதற்கு?" என அவர் பகிரங்கமாக அறிவித்தார். 1835-ல் வில்லியம் பெண்டிங் பிரபு, மெக்காலே குறிப்புகளை ஏற்று முழுமையாக அமல்படுத்த உத்தரவிட்டார். பிற்காலத்தில் அரசு வேலை, தனியார் ஆலை வேலை எனும் ஈர்ப்பே கல்வியின் அடித்தளமாக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி தரும் சான்றிதழ், வேலை பெறும் ஒரு அடையாளச் சீட்டாகப் பயனாகிறது' என்று காந்தி விமர்சித்ததுள்ளார். இக்கல்விமுறையே தற்போது வரை உள்ளது. சுயமாக மாணவர்களை சிந்திக்கவிடாமல் ஏன்?..எதற்கு?..எப்படி?.. என கேள்வி கேக்காமல் பாடப்புத்தகத்தில் உள்ளதை மட்டும் அப்படியே பாத்து படித்து வந்தனர். தற்போது வரை மாணவர்கள் அவ்வாறே படித்துவருகின்றனர். எனவேதான் குறுகிய மனோபாவம் உள்ளவர்களாக மாணவர்கள் வளருகின்றனர். பள்ளி படிப்பை முடித்தபின்னர் சமுதாயத்தில் தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும் தங்களுக்கு ஏற்படும் தோல்விகளையும் எவ்வாறு கையாளவேண்டும் என தெரியாமல் மனமுடைந்து வழிதவறிபோய்விடுகின்றனர். இன்னும் ஒரு சிலர் தங்கள் வாழ்க்கையை முடித்து கொள்கின்றனர். ஒருசில மாணவர்கள் மட்டும்மே கேள்வி கேட்டு புதிய புதிய வழிகளில் விடை தேடுகின்றனர். இவர்களே பிற்காலத்தில் தலைசிறந்தவராக விளங்குகின்றனர். தற்போது வரவிருக்கும் புதியபாடத்திட்டத்தில் மாணவர்கள் சுயமாக சிந்திதித்து செயல்படும் வண்ணம் பாடத்திட்டம் அமையவேண்டும். மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்றார் போல் கணினி உதவியுடன் தனக்கு தேவையான தகவல்களை இணையதளம் மூலமாக உலகில் எந்த மூலையில் இருந்தும் உடனே பெற்றுவிடுகின்றனர். அனைத்து துறைகளுக்கும் முன்னோடியாக நாம் பயன்படுத்துவது கணினியும், கணினி சார்ந்த செயலிகலுமே. இன்றைய காலகட்டத்தில் (கணினி மயமான உலகில்) மாணவர்களின் முழுமையான அறிவுவளர்ச்சிக்கு கணினி வழிக்கற்றல் மட்டுமே பெரும்பங்கு வகிக்கின்றது. உதாரணமாக நாம் அன்றாட பயன்படுத்தும் கணினி செயலிகள் Online Seminar Classes, Online banking, PDF Books, Online Edu Videos, Email, You tube, Facebook, WhatsApp, Pay tm, Auto CAT, e-Commerce, Tally, Photoshop, etc..,

No comments:

Post a comment