8 ஆயிரத்து 878 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழும எல்லை விரிவாக்கம் அரசாணை வெளியீடு


Chennai Metropolitan Area to be 8,878 Sq km from 1189 Sq Km | 8 ஆயிரத்து 878 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழும எல்லை விரிவாக்கம் அரசாணை வெளியீடு | சென்னை பெருநகர வளர்ச்சி குழும எல்லை 8 ஆயிரத்து 878 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு விரிவாக்கம் செய்யப்படுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) திட்ட அனுமதி பிரிவின் ஒப்புதலுடன் தான் நகரில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியும். மேலும் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கட்டுவதற்கு அனுமதியையும் வழங்கி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வேகமாக வளர்ச்சி அடைந்ததையடுத்து, சி.எம். டி.ஏ. எல்லையை விரிவாக்க வேண்டும் என்று கடந்த 2011-ம் ஆண்டு தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் திட்ட அனுமதி பிரிவு எல்லை நீட்டிக்கப்படும் என்று தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கடந்த ஜூலை மாதம் சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டார். அதில் அவர், சென்னையை சுற்றி அதிவேகமாக நகர்மயமாகி வரும் பகுதிகளில் ஏற்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை ஒழுங்குபடுத்தவும், அப்பகுதிகளில் பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் வளர்ந்து வரும் பொருளாதார செயல்பாடுகளுக்கு தேவையான வசதிகளை உண்டாக்குவதற்கு சி.எம்.டி.ஏ. எல்லையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் வேலூர் மாவட்டம் அரக்கோணம் வட்டம், நெமிலி தாலுகாவை உள்ளடக்கி 8 ஆயிரத்து 878 சதுர கிலோ மீட்டர் விரிவுபடுத்தப்படும்' என்று தெரிவித்தார். இந்த நிலையில் தமிழக அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறத்துறை முதன்மை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- சி.எம்.டி.ஏ. எல்லை விரிவாக்க திட்டத்தை அரசு மிக கவனமுடன் பரிசீலித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழும எல்லை விரிவாக்கம் மற்றும் நகருடன் கூடுதல் பகுதிகளை இணைக்க மேற்கொள்ளும் சட்டம் பிரிவு 2 (23-ஏ)-ன் கீழ் ஆணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் வேலூர் மாவட்ட கலெக்டர்கள் இந்த அரசாணையை ஏற்று, அதில் குறிப்பிடப்பட்டு உள்ள விதிகளை தங்கள் மாவட்ட பரப்பளவுகளில் மேற்கொள்ள வேண்டும். இந்த அரசாணையை தமிழில் மொழி பெயர்ப்பு செய்து, மேற்கூறப்பட்ட மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுப்ப வேண்டும். மாவட்ட எல்லைகளில் ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி, 16 நகராட்சிகள், 20 பேரூராட்சிகள் என 1,189 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு எல்லையில் இயங்கி வரும் சி.எம்.டி.ஏ. தனது எல்லையை 8 மடங்காக உயர்த்த உள்ளது குறிப்பிடத்தக்கது.Chennai, Jul 3 (PTI) Chennai Metropolitan Area will be expanded to 8,878 square KMs by including areas from neighbouring districts. The whole of Kancheepuram and Tiruvallur districts besides Arakkonam taluk in Vellore would included in Chennai Metropolitan Area, Housing and Urban Development Minister K Radhakrishnan announced today in the Assembly. The expansion will ensure equitable growth and integrated urbanisation, he said. Making new announcements for his department, the Minister said the initiative was to streamline development in areas around Chennai that were witnessing rapid urbanisaiton. Also, the measure would help decongestion in Chennai city, he added. Announcing that a Strategic Regional Plan will be prepared for the region, he said it will focus on aspects like transport, basic infrastructural amenities, guarding fertile farm lands and environment protection. To fulfil the goals, necessary changes will be made to the adminsitrative set-up of Chennai Metropolitan Development Authority, he said. According to Chennai Metropolitan Development Authority website, the present CMA area comprises 1189 Sq Km comprising Chennai district and parts of Thiruvallur and Kancheepuram districts. The expansion plan was mootted way back in 2011. The proposal was similar to what other cities like Bengaluru and Hyderabad had done, expanding their respective regions to ensure proper development.

Comments