பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள் தங்களுக்கு இருக்கும் பயத்தை போக்க வேண்டும்-பிரதமர் நரேந்திர மோடி


பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள் தங்களுக்கு இருக்கும் பயத்தை போக்க வேண்டும் என்றால் நம்பிக்கையையும் கவனத்தையும் கைகொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். தேர்வு தொடர்பான விவாதம் என்ற நிகழ்ச்சிக்கு பிரதமர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தது. புது தில்லியில் உள்ள டல்கடோரா மைதானத்தில் இன்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில், பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது, இன்று நான் ஒரு மாணவனாகவும், நீங்கள் தேர்வாளராகவும் இருக்கிறீர்கள். என்னை பிரதமராக நினைக்கவேண்டாம். உங்களில் ஒருவனாக நினைத்து எனக்கு மதிப்பெண் அளியுங்கள். 10 மதிப்பெண்களுக்கு எனக்கு எவ்வளவு மதிப்பெண் அளிப்பீர்கள் என்று சொல்லுங்கள் என்றார். தேர்தல் பயம், அழுத்தம் போன்ற பல்வேறு சந்தேகங்களை எழுப்பி மாணவ, மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்தார். தேர்வுக்கு முழுதும் தயாராகியும் பயத்தை எப்படி போக்குவது என்ற கேள்விக்கு பதிலளித்த மோடி, நேர்மையாக நாம் தேர்வுக்கு முழுவதும் தயாரானாலும் கூட, நமக்கு நம்பிக்கை இல்லை என்றால் கடைசி நேரத்தில் படித்தது எல்லாம் மறந்துவிடும். தன்னம்பிக்கை என்பது மிக அவசியம். எனவே நமக்கு நாமே சவால் விட்டுக் கொண்டு கடின உழைப்பை செலுத்தி படிக்க வேண்டும். நம்மை மேம்படுத்திக் கொள்வது பற்றியே சிந்திக்க வேண்டும். கல்வி பயில கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம், அது ஒரு தனிக்கலை என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு. நாம் அனைவருமே தினந்தோறும் பல காரியங்களை செய்கிறோம். அனைத்துக்குமே கவனம் மிக அவசியம் என்று கூறினார்.  DOWNLOAD SITE MAP

Comments