KALVISOLAI TNPSC

Saturday, 17 February 2018

CURRENT AFFAIRS | கடந்து வந்த பாதை | பிப்ரவரி 3- 9 | முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு

கடந்து வந்த பாதை | பிப்ரவரி 3- 9 | போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே வழங்கப்படுகிறது. பிப்ரவரி 3-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இது...
 1. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 கடைகள் எரிந்து சாம்பலாயின. வீரவசந்தராயர் மண்டபக் கூரை இடிந்து விழுந்தது. தீ அணைக்கப்பட்டதால் ஆயிரங்கால் மண்டபம் தப்பியது. சேதம் குறித்து ஆய்வு நடத்த நிபுணர் குழு அமைக்கப்பட்டது. (பிப்ரவரி 3)
 2. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியருக்கு பதவி உயர்வு வழங்க ரூ. 30 லட்சம் லஞ்சம் வாங்கிய துணைவேந்தர் கணபதி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த பேராசிரியர் தர்மராஜையும் போலீசார் கைது செய்தனர். (பிப்ரவரி 3)
 3. நியூசிலாந்தின் மவுன்ட் மாங்கானுவில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று வரலாறு படைத்தது. (பிப்ரவரி 3)
 4. குஜராத் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற உலகத் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடங்கிவைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 2016- 2017-ம் ஆண்டில் இந்தியாவில் ரூ. 4 லட்சம் கோடி அன்னிய முதலீடு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார். (பிப்ரவரி 3)
 5. கடந்த ஜனவரி மாதத்தில் பங்கு மற்றும் கடன் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் ரூ. 22,254 கோடி முதலீடு செய்துள்ளனர். (பிப்ரவரி 4)
 6. காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். (பிப்ரவரி 4)
 7. செஞ்சூரியனில் நடந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 118 ரன்னில் சுருட்டிய இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. (பிப்ரவரி 4)
 8. புதுடெல்லியில் நடைபெற்ற இந்திய ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து அமெரிக்க வீராங்கனை பீவென் ஜாங்குடன் போராடித் தோல்வி அடைந்தார். (பிப்ரவரி 4)
 9. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எல்லை 8 ஆயிரத்து 878 சதுர கிலோமீட்டர் பரப்பளவு விரிவாக்கம் செய்யப்படுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. (பிப்ரவரி 5)
 10. தமிழகத்தில் சரக்கு- சேவை வரி (ஜி.எஸ்.டி.) இலக்கைத் தாண்டி ரூ. 19 ஆயிரத்து 592 கோடி வசூலானது. இது இந்திய அளவில் இரண்டாவது இடமாகும். (பிப்ரவரி 5)
 11. மத்திய பட்ஜெட்டில் தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு ரூ. 2 ஆயிரத்து 548 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக ரெயில்வே அமைச்சகம் தெரிவித்தது. (பிப்ரவரி 6)
 12. கடுமையான அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் மாலத்தீவு நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கைது செய்யப்பட்டனர். இதில் இந்தியா தலையிட முன்னாள் அதிபர் முகமது நஷீத் வேண்டுகோள் விடுத்தார். (பிப்ரவரி 6)
 13. கடன் வட்டி விகிதங்கள் பற்றிய தனது கொள்கை முடிவுகளை பாரத ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி, குறுகிய கால கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. எனவே 'ரெப்போ ரேட்' எந்த மாற்றமும் இன்றி 6 சதவீதமாக நீடிக்கிறது. 'ரிவர்ஸ் ரெப்போ ரேட்'டும் மாறாமல் 5.75 சதவீதமாக உள்ளது. (பிப்ரவரி 7)
 14. குறைந்த விலை வீடு வாங்குவோரிடம் சரக்கு, சேவை வரி வசூலிக்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டது. சர்க்கஸ், நடன, நாடக நிகழ்ச்சிகளில் நபருக்கு ரூ. 500 வரையிலான நுழைவுக் கட்டணத்துக்கும் ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்கப்பட்டது. (பிப்ரவரி 7)
 15. வருகிற 2021- 2022-ம் நிதியாண்டுக்குள், நாட்டில் புதிதாக 24 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. (பிப்ரவரி 7)
 16. தைவான் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் இடிந்தன. 7 பேர் பலியாகினர், 250 பேர் படுகாயம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. (பிப்ரவரி 7)
 17. கேப்டவுனில் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்த இந்தியா, 'ஹாட்ரிக்' வெற்றியைப் பெற்றது. (பிப்ரவரி 7)
 18. கிம்பெர்லியில் தென்ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டு களை வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற சாதனையை இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி படைத்தார். (பிப்ரவரி 7)
 19. மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு நிதி ஒதுக்காததைக் கண்டித்து அம்மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடந்தது. நாடாளுமன்றத்தில் ஆந்திர எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். (பிப்ரவரி 8)
 20. வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு ஊழல் வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து அந்த நாட்டின் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. (பிப்ரவரி 8)
 21. இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 113 பேரை விடுதலை செய்ய அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டது. (பிப்ரவரி 9)
 22. தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் 23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்கியது. (பிப்ரவரி 9)
 23. மாலத்தீவு நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி குறித்து பிரதமர் மோடியும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் டெலிபோனில் அவசர ஆலோசனை நடத்தினர். (பிப்ரவரி 9)
 24. நடப்பு 2017- 2018-ம் நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் (ஏப்ரல்- டிசம்பர்) ரூ. 17 ஆயிரம் கோடி மதிப்புக்கு 51 லட்சம் டன் பருப்பு இறக்குமதி ஆகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. (பிப்ரவரி 9) 
 25. DOWNLOAD - FIND YOUR NEEDS HERE

No comments:

Post a comment