மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி தற்போதைய 5 சதவீத அகவிலைப்படி, 2 சதவீதம் உயர்த்தப்பட்டு 7 சதவீதம் ஆகிறது.


மத்திய அரசு ஊழியர்களுக்கு அக விலைப்படி உயர்வு 7 சதவீதம் ஆகிறது | மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவீதமாக உயருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம், டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படியின் கூடுதல் தவணையை விடுவிக்க முடிவு எடுக்கப்பட்டது. இது ஜனவரி 1-ந் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். தற்போதைய 5 சதவீத அகவிலைப்படி, 2 சதவீதம் உயர்த்தப்பட்டு 7 சதவீதம் ஆகிறது. விலைவாசி உயர்வை ஈடுகட்டுவதற்காகத்தான் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. இந்த தகவல் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் இடம் பெற்று உள்ளது. இந்த அறிக்கையின்படி, அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசில் பணியாற்றி வருகிற 48 லட்சத்து 41 ஆயிரம் ஊழியர்களும், அதிகாரிகளும் பலன் அடைவார்கள். இதேபோன்று, இந்த அகவிலைப்படி உயர்வின்மூலம் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வுபெற்ற 61 லட்சத்து 17 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் பலன் பெறுவார்கள். இந்த அகவிலைப்படி உயர்வால், மத்திய அரசின் கஜானாவுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரத்து 77 கோடியே 72 லட்சம் செலவு பிடிக்கும். 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில், ஒப்புக்கொள்ளப்பட்ட விதிமுறையின்கீழ் இந்த அகவிலைப்படி உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment