தேர்வுக்குத் தயாரா? பத்தாம் வகுப்பு தமிழ் முதல், இரண்டாம் தாள்


பத்தாம் வகுப்பைப் பொறுத்தவரை பொதுத் தேர்வின் முதல் தாள் என்பதாலும், தமிழ்தானே என்ற அலட்சியத்தாலும் மாணவர்கள் மத்தியில் கவனக்குறைவு இருக்கும். பொதுத் தேர்வின் இனிய தொடக்கமாகத் தமிழ் தாள்களைத் தெளிவாக எதிர்கொள்வது அவசியம். தமிழ் தேர்வுகளைப் பிழை இல்லாமல், கூடுமானவரை கையெழுத்து திருத்தமாகவும் தெளிவான நடையிலும் பக்கத்துக்கு 15 முதல் 20 வரிகளிலும் எழுதுவது நன்று. மேற்கோள்கள் போன்ற தனித்துக் காட்டும் இடங்களை மட்டும் கறுப்பு மை பேனாவில் எழுதலாம். அவசியமற்ற வண்ணங்களைத் தவிர்க்க வேண்டும். படிக்கத் தொடங்கும் முன்னர், தேர்வுத் தாள் அமைப்பைப் புரிந்துகொள்வது அவசியம். இதன் அடிப்படையில், வினாக்கள் வாரியாக ஒருமுறை சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.  DOWNLOAD

Comments