அரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு


அரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ததும் கலந்தாய்வு | அரசு பள்ளிகளில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்த பின்னரே கலந்தாய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2018-2019-ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வின்போது பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின் பொது இடமாறுதலுக்கு குறிப்பிட்டுள்ள நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். உபரியாக உள்ள.. காலிப்பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டும்போது ஆசிரியர்கள் உபரியாக உள்ள காலியிடங்களை இயக்குநரின் தொகுப்புக்கு கொண்டுசெல்ல வேண்டும். அந்த பணியிடங்களை கலந்தாய்வுக்கு காட்டக்கூடாது. இந்த இடங்களுக்கு மாறுதலும் வழங்கக்கூடாது. உபரி ஆசிரியர் பணியிடங்களை பணிநிரவல் செய்த பின்னர் பொது இடமாறுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முன்னுரிமை மனமொத்த மாறுதல் அடிப்படையில் மாறுதல் பெற்றவர்கள் மீண்டும் ஏற்கெனவே பணிபுரிந்த பள்ளிக்கே மனமொத்த மாறுதலில் செல்ல அனுமதிக்கக் கூடாது. முன்னுரிமை பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு கலந்தாய்வின்போது முன்னுரிமை வரிசை அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.  DOWNLOAD

பிளஸ் 1 வகுப்புகளுக்கான பொது தேர்வு முடிவுகள் | 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி..

பிளஸ் 1 வகுப்புகளுக்கான பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில் மாணவ மாணவிகள் என 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதன் முறையாக பிளஸ்-1 மாணவ மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 பள்ளி மாணவ-மாணவிகளும், 1,753 தனித்தேர்வர்களும் எழுதினர். மொத்தத்தில் 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 பேர் தேர்வெழுதினர். விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி முடிவடைந்தது. இதையடுத்து பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியாகின. இதில் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளில் 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்களில் 87.4 சதவீதம் பேரும், மாணவிகளில் 94.6 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வருடம் மாணவர்களை விட மாணவிகள் 7.2 சதவீதம் பேர் அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தேர்வு முடிவில் 97.3 சதவீதம் தேர்ச்சியுடன் ஈரோடு முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து 96.4 சதவீதம் தேர்ச்சியுடன் திருப்பூர் 2வது இடமும் மற்றும் 96.2 சதவீதம் தேர்ச்சியுடன் கோவை 3வது இடமும் பிடித்துள்ளன. 80.21 சதவீதம் தேர்ச்சியுடன் விழுப்புரம் கடைசியிடம் பிடித்துள்ளது. மொத்தம் 2,054 மேனிலை பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதேபோன்று 2,724 அரசு பள்ளிகளில் 188 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. | RESULT

PLUS ONE RESULT - MARCH 2018 | பிளஸ் 1 பொதுத்தேர்வின் முடிவுகள் இன்று (மே 30) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகின்றன.


இன்று பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவு இந்த ஆண்டு முதல்முறையாக நடத்தப்பட்ட பிளஸ் 1 பொதுத்தேர்வின் முடிவுகள் இன்று (மே 30) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகின்றன. கடந்த ஆண்டு வரையில் பிளஸ் 1 தேர்வானது பள்ளி அளவிலான சாதாரண தேர்வாகவே நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டிலிருந்துதான் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 போன்று பிளஸ் 1 தேர்வும் பொதுத்தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில், முதலாவது பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 7 முதல் ஏப்ரல் 16-ம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவ - மாணவிகள், தனித்தேர்வர்கள் என 8 லட்சத்து 63 ஆயிரம் பேர் தேர்வெழுதியுள்ளனர். இந்த நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களில் பதிவெண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள லாம்  www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in  DOWNLOAD

பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் | 52 புதிய கல்வி மாவட்டங்கள் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...


பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரிக்கு இணையான பதவியாக இருப்பதால் அப்பணியிடங்களை மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக மாற்ற முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி பணியிடங்கள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள், 2 மாவட்ட முறைசாரா கல்வி அலுவலர், ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக தற்போது மாற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, புதிதாக 52 கல்வி மாவட்டங்களை தொடங்க பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டார். அதன்படி, 52 புதிய கல்வி மாவட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், கல்வி மாவட்டங்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந் துள்ளது. DOWNLOAD

8 லட்சத்து 63 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது.


8 லட்சத்து 63 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு | 8 லட்சத்து 63 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) வெளியிடப்படுகிறது. பிளஸ்-1 தேர்வு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதன் முறையாக பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 பள்ளி மாணவ-மாணவிகளும், 1,753 தனித்தேர்வர்களும் எழுதினர். மொத்தத்தில் 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 பேர் தேர்வெழுதினர். மேலும், வேலூர், கடலூர், புதுக்கோட்டை, கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் 62 ஆண் கைதிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் தேர்வெழுதினர். நாளை வெளியீடு மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதை தடுக்க 4,000 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது. விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி முடிவடைந்து உள்ளது. இதையடுத்து பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்த தேர்வு முடிவுகளை ( www.tnresults.nic.in, www.dge.tn.nic.in, www.dge2.tn.nic.in ) என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். DOWNLOAD

1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் மே 31 இல் இணையதளத்தில் வெளியீடு


1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் மே 31 இல் இணையதளத்தில் வெளியீடு | 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் இணையதளத்தில் மே 31  முதல் படிப்படியாக வெளியிடப்படுகின்றன. தமிழகத்தில் நீண்ட காலமாக மாற்றப்படாமல் இருந்த பள்ளி பாடத்திட்டம் இந்த ஆண்டுமுதல் படிப்படியாக மாற்றியமைக்கப்படுகிறது. முதல்கட்டமாக 1,6,9,11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதைத்தொடர்ந்து, மற்ற வகுப்புகளுக்கு அடுத்தடுத்த கல்வி ஆண்டுகளில் படிப்படியாக புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். இந்த நிலையில், 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்களை முதல்வர் கே.பழனிசாமி கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். புதிய புத்தகங்கள் இம்மாத இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளன. 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் மே 23-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அண்மையில் அறிவித்தார். அதன்படி, வெளியிடவில்லை. புதிய பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணையதளத்தில் (www.tnscert.org) மே 31 இல் வெளியிடப்படுகின்றன. இணையதளத்தின் சர்வர் திறனுக்கு ஏற்ப, புதிய பாடப்புத்தகங்கள் வகுப்புகள் மற்றும் பாடங்கள் வாரியாக மே 31 இல் படிப்படியாக இணையதளத்தில் வெளியிடப்படும் என்று கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநரும், புதிய பாடத் திட்டக்குழுவின் உறுப்பினர்-செயலருமான ஜி. அறிவொளி தெரிவி்த்தார். பள்ளி மாணவர்களுக்கான அனைத்து பாடப்புத்தகங்களையும் வகுப்புகள், பாடங்கள் வாரியாக தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் இணையதளத்தில் (www.textbooksonline.tn.nic.in) பார்க்கலாம். அந்த வகையில், 1,6,9,11-ம் வகுப்பு புதிய பாடப்புத்தகங்களையும் பாட நூல் கழக இணையதளத்தில் வெளியிட ஏற்பாடு செய்யப்படும் என்று அதன் நிர்வாக இயக்குநர் டி.ஜெகந்நாதன் தெரிவித்தார். DOWNLOAD

எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு மறுகூட்டலுக்கு மே 24-ம் தேதி முதல் 26-ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம்.


எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு மறுகூட்டலுக்கு மே 24-ம் தேதி முதல் 26-ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி வழியாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையம் வழியாகவும் மே 24-ம் தேதி (நாளை) முதல் 26-ம் தேதி மாலை 5.45 மணி வரை மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கட்டணமாக மொழித்தாள், ஆங்கிலத் தாளுக்கு தலா ரூ.305, கணிதம், அறிவியல், சமூக அறிவியல், விருப்ப மொழிப்பாடம் ஆகியவற்றுக்கு தலா ரூ.205 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் இடத்திலேயே கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை மாணவர்கள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். இதில் உள்ள விண்ணப்ப எண் மூலமாகத்தான் பின்னர் மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ள முடியும். சிறப்பு துணை பொதுத் தேர்வு பொதுத்தேர்வில் வெற்றிவாய்ப்பை இழந்தவர்கள், தேர்வுக்கு விண்ணப்பித்து கலந்துகொள்ளாதவர்களுக்கு ஜூன் 28-ம் தேதி சிறப்பு துணை பொதுத் தேர்வு நடத்தப்படும். இதற்கு விண்ணப்பிப்பது குறித்து தனியாக அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

தமிழில் சட்டப் பயிற்சி மனுபாத்ரா நிறுவனம் அறிமுகம்

தமிழில் சட்டப்பயிற்சி சேவைகளை மனுபாத்ரா பகுப்பாய்வு நிறுவனம் தொடங்கியுள்ளது. இதற்காக lawskills.com என்கிற இணையதளத்தினை அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக மனுபாத்ரா இன்பர்மேஷன் நிறுவனத்தின் இயக்குநர் தீபக் கபூர் கூறுகையில், இந்தியாவில் சட்டக் கல்வி சிறப்பான வகையில் இருந்தாலும், சட்டக் கல்வி முடிப்பவர் கள் நீதிமன்ற நடைமுறைகளை அறிந்து கொள்வதற்காக வழக்கறிஞர்களிடத்தில் தனியாக பயிற்சி பெறுகின்றனர். இதனால் அவர்கள் சொந்தமாக தொழி லைத் தொடங்க சில ஆண்டுகள் கூடுதலாக செலவாகிறது. இந்த அனுபவப் பயிற்சி காலகட்டத்தை தவிர்க்கும் விதமாக லா ஸ்கில்ஸ் இணையதள பயிற்சி இருக்கும். அதுபோல கார்ப்பரேட்டுகள் ஈடுபடும் ஒப்பந்தங்கள், அவர்களுக்கான சட்ட நடைமுறைகளையும், மற்றும் வழக்கு நடைமுறைகளை தெரிந்து கொள்ளலாம். சட்ட மாணவர்கள் அல்லாதவர்களும் இந்திய சட்ட நடைமுறைகள் குறித்த கல்வி பெற இந்த இணைய தளம் உதவும். தேர்ந்த மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு தமிழில் சட்ட விவரங்களை அளிக்கிறோம். பயிற்சிக்கான சராசரி கட்டணம் ரூ.4,000 என்கிற அளவிலேயே நிர்ணயித்துள்ளோம். சட்டக் கல்லூரிகள் அளவில் இந்த இணைய தளத்தை கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளோம். தற்போது தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் சட்ட விவரங்களை அளிக்கிறோம் வரும் ஆண்டுக்குள் 10 மொழிகளில் அளிக்க உள்ளோம். தினசரி வழக்கு விவரங்கள் வரை இணையதளத்தில் உடனடியாக பார்க்க முடியும் என்றார். சட்டத் தகவல்கள் தேடல், பகுபாய்வு துறையில் உள்ள மனுபாத்ரா இதன் மூலம் சட்டக் கல்வி பயிற்சியிலும் கால்பதித்துள்ளது.

அரசு பள்ளிகளை மூடும் திட்டம் இல்லை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்


அரசு பள்ளிகளை மூடும் திட்டம் இல்லை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் | அரசு பள்ளிகளை மூடும் திட்டம் எதுவும் இல்லை என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழகத்தில் 37,211 அரசு பள்ளிகளும் 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகளும் 12,419 தனியார் சுயநிதி பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இவற்றில் ஒரு கோடியே 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயில்கின்றனர். அரசு பள்ளிகளில், நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின்படி மாணவர்கள் எண்ணிக்கை குறித்த விவரங்களையும், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளின் எண்ணிக்கையையும் கணக்கெடுக்க பள்ளிக்கல்வித்துறை அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. , சுமார் 900 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 15-க்கும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளை அருகேயுள்ள பள்ளிகளுடன் இணைக்கலாமா என்று அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில், மாணவர் சேர்க்கை 10-க்கும் குறைவாக உள்ள 890 அரசு தொடக்கப்பள்ளிகளை மூட அரசு பரிசீலித்து வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதுதொடர்பாக சென்னையில் தனியார் தொலைக்காட்சிக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: அரசு தொடக்கப் பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்கள் உடைய பள்ளிகளாக 892 பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், மாணவர் எண்ணிக்கை குறையாமல் இருக்கவும் என்னென்ன வழிவகைகளை செய்யலாம் என்று ஆய்வு செய்துகொண்டிருக்கிறோம். அரசு பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை. 

SSLC RESULT MARCH 2018 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 23.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.


SSLC RESULT MARCH 2018 | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 23.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும். 16.03.2018 முதல் 20.04.2018 வரை நடைபெற்ற மார்ச் / ஏப்ரல் 2018, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 23.05.2018 அன்று காலை 09.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்க் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். 
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres), அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்குக் குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும். தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்குத் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக ( SMS) அனுப்பப்படும். | DOWNLOAD  

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் 28.05.2018 பிற்பகல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்தல் 28.05.2018 பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மைய தலைமையாசிரியர்கள் வழியாகவும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், 28.05.2018 பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள் / தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழைத் தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலும் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். | DOWNLOAD 

SSLC EXAM MARCH 2018 RE TOTAL DETAILS | மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் பள்ளி மாணாக்கர் மறுகூட்டலுக்கான கட்டணத்தை தாங்கள் பயின்ற பள்ளியில் செலுத்த வேண்டும்.


மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை மார்ச் / ஏப்ரல் 2018, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாம் தேர்வெழுதிய எந்தவொரு பாடத்திற்கும் மறுகூட்டலுக்கு (Retotalling) விண்ணப்பிக்கலாம். மார்ச் / ஏப்ரல் 2018 பத்தாம் வகுப்பு தேர்வெழுதி விடைத்தாட்களின் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விழைவோர் 24.05.2018 (வியாழக் கிழமை) முதல் 26.05.2018 (சனிக் கிழமை) மாலை 5.45 மணி வரை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வழியாகவும் விண்ணப்பிக்க வேண்டும். மறுகூட்டல் கட்டணம் பகுதி – I மொழி - ரூ.305/- பகுதி – II மொழி (ஆங்கிலம்) - ரூ.305/- பகுதி – III - கணிதம், அறிவியல் மற்றும் - ரூ.205/- சமூக அறிவியல் பகுதி – IV விருப்ப மொழிப்பாடம் - ரூ.205/- மறுகூட்டலுக்கான கட்டணம் செலுத்தும் முறை மறுகூட்டலுக்கான கட்டணத்தை பள்ளி மாணாக்கர் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் பணமாகச் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ள இயலும். | DOWNLOAD

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வு 28.06.2018 முதல் நடைபெறவுள்ளது.


பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வு 28.06.2018 முதல் நடைபெறவுள்ளது.  பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வு, ஜூன் / ஜூலை 2018 மார்ச் / ஏப்ரல் 2018-ல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வெழுத பதிவுசெய்து, தேர்ச்சி பெறாதோருக்கும் / வருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைப் பொதுத்தேர்வு 28.06.2018 முதல் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. DOWNLOAD

FTP PRIVATE SCHOOLS TEACHERS VACANT DETAILS | தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது


தனியார் பள்ளி தாளாளர்களே.. இதுவரை உங்கள் பள்ளிக்கான ஆசிரியர் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லையா? தனியார் பள்ளிகளில் வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களே... தமிழகத்தின் அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வேண்டுமா? (தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது) தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை சி பி எஸ் சி பள்ளிகள் சங்கத்தின் பொது செயலாளர் திரு கே. ஆர். நந்தகுமாரின் வேண்டுகோளை படியுங்கள். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அனைத்து தனியார் பள்ளிகளும் அவரவர் பள்ளிக்கு தேவையான ஆசிரியர் பணியிட தேவையை பூர்த்தி செய்ய FIND TEACHER POST – WEBSITE யை பயன்படுத்தி மிக குறைந்த செலவில் ஆண்டு முழுவதும் பயனடையவும். அனைத்து தனியார் பள்ளிகளும் தங்கள் பள்ளிக்கு தேவையான ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க அதிக செலவு செய்வதை தடுக்கும் பொருட்டும், வேலை தேடும் பட்டதாரி ஆசிரியர்களும் பிற மாவட்ட வேலை வாய்ப்பு செய்திகளை அறிந்து பயன்பெறும் பொருட்டும் அனைத்து தனியார் பள்ளிகள் மற்றும் வேலைதேடும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் FIND TEACHER POST – மென்பொருளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த மென்பொருள் பற்றிய பயனை அறிந்துகொள்ள கடந்த திங்கள்கிழமை FIND TEACHER POST – அலுவலகம் சென்று மென்பொருளின் செயல்பாடு மற்றும் இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளின் ஆசிரியர் தேவையை பூர்த்தி செய்ய உதவி செய்யும் FIND TEACHER POST ன் HELP DESK (உதவி மையம்) செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு பாராட்டினார். மேலும் அனைத்து தனியார் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களை இணைக்கும் இந்த முயற்சிக்கு அனைத்து தனியார் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொண்டார். FIND TEACHER POST ன் இயக்குனர் தனியார் பள்ளிகளுக்கு தெரிவித்ததாவது, இதுவரை 280க்கும் மேற்பட்ட பள்ளிகள் இந்த மென்பொருள் மூலம் பயன்பெற்று வருகின்றன. உங்கள் பள்ளியையும் இதில் இணைப்பதன் மூலம் மிகக்குறைந்த செலவில் ஆசிரியர் தேவையை ஆண்டு முழுவதும் மிக சுலபமாக பூர்த்தி செய்யமுடியும். மேலும் தகுதியுள்ள ஆசிரியர்கள், மற்றும் முதல்வர்களை தேர்வு செய்ய முடியும். மேலும் தேவையான அனைத்து உதவிகளும் உதவி மையம் மூலம் செய்யப்படுகிறது. உதாரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு திருநெல்வேலியில் உள்ள ஒரு வேலை தேடும் ஆசிரியரை மிக சுலபமாக தொடர்பு கொள்ள முடியும். "This is not a brokering system. It is a software platform to connect Job seekers with Employers directly" இந்த மென்பொருளில் இணைவதன் மூலம் பள்ளிகள் பெறும் சிறப்பசங்கள். • ஆசிரியர் தேவை ஆண்டு முழுவதும் பூர்த்தி செய்யப்படுகிறது. • உங்கள் பள்ளியின் காலிப்பணியிட விளம்பரம் தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களை சென்றடையும். • தேவைப்படும் பள்ளிகளுக்கு வடஇந்திய ஆசிரியர்கள் (நீட் அனுபவம் பெற்றவர்கள்) அனுப்பி வைக்கப்படுகிறார்கள். • இதுவரை கற்பனையே செய்து பார்க்க முடியாத வகையில் சுமார் 80000 வினாக்களை உள்ளடக்கிய புதிய QUESTION PATERN படியான வினாத்தாள்கள் PDF format ல் நிமிடத்தில் நீங்களே உங்கள் பள்ளியின் பெயரில் தயார் செய்து கொள்ளமுடியும் (180 க்கும் மேற்பட்ட பள்ளிகள் இதை பயன்படுத்தி வருகின்றன) இதன் மூலம் எந்த ஒரு வினாத்தாளும் நீங்கள் TYPE செய்ய தேவையில்லை. • மெட்ரிக் பள்ளி மாணவனுக்கு தேவைப்படின் CBSE பாடத்திட்டத்தில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு இதில் உள்ள ONLINE QUIZ மூலம் நீட் தேர்வுக்கென்று Coaching தர முடியும். வேலைதேடும் அனைத்து ஆசிரியர்களுக்கும்: • Android Mobile பயன்படுத்துபவராக இருந்தால் கண்டிப்பாக உங்கள் செல்லிடபேசியில் Find Teacher Post – App (http://ftpa.in/appk) யை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். செல்லிடபேசியில் Play Store க்கு சென்று Find Teacher Post என Type செய்து App யை பதிவிறக்கமும் செய்து கொள்ளமுடியும். • அதில் உள்ள PROFILE ல் உங்களை பற்றிய முழு விவரமும் UPDATE செய்யவும். ஏனெனில் இதில் உள்ள விவரம் நீங்கள் வேலை கேட்கும் பள்ளிக்கு நேரிடையாக செல்லும். • பதிவு செய்ய தெரியாதவர்கள் மட்டும் 08067335589 என்ற எண்ணுக்கு Missed Call கொடுக்கவும். • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய விவரமும் உங்களுக்கு மிக சுலபமாக கிடைக்கும். • நேரிடையாக நீங்களே இந்த மென்பொருள் மூலம் உங்களுக்கு தேவைப்படும் பள்ளிக்கு Apply செய்து நேர்காணல் பற்றிய தகவலை உடனே பெற முடியும். மிக விரைவில் வேலைவாய்ப்பு உத்தரவாதத்துடன் கூடிய STAR PROFILE சேவை தொடங்கப்படும் முற்றிலும் இலவசமான இந்த சேவையை உங்கள் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள். மேலும் விவரங்களுக்கு FIND TEACHER POST TEL: 04256 232213, CELL: 8870574091, 7010347233, 9597534613 www.findteacherpost.com Email: contact@findteacherpost.com DOWNLOAD VACANT LIST

ONLINE BOOK SHOP | BUY AKASH IAS ACADEMY - TET PAPER 2 - SOCIAL SCIENCE STUDY MATERIALS ( 6 BOOKS ) | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் ( 6 BOOKS ) ஆன்லைனில் வாங்க கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்துங்கள்.


ONLINE BOOK SHOP | BUY AKASH IAS ACADEMY - TET PAPER 2 - SOCIAL SCIENCE STUDY MATERIALS ( 6 BOOKS )  | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் ( 6 BOOKS ) ஆன்லைனில் வாங்க கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்துங்கள்.
 

ONLINE BOOK SHOP | BUY AKASH IAS ACADEMY - TET PAPER 2 - SCIENCE - MATHS STUDY MATERIALS ( 6 BOOKS ) | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் ( 6 BOOKS ) ஆன்லைனில் வாங்க கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்துங்கள்.


ONLINE BOOK SHOP | BUY AKASH IAS ACADEMY - TET PAPER 2 - SCIENCE - MATHS STUDY MATERIALS ( 6 BOOKS )  | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் ( 6 BOOKS ) ஆன்லைனில் வாங்க கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்துங்கள்.
 

ONLINE BOOK SHOP | BUY AKASH IAS ACADEMY - TET PAPER 1 STUDY MATERIALS ( 6 BOOKS ) | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் ( 6 BOOKS ) ஆன்லைனில் வாங்க கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்துங்கள்


ONLINE BOOK SHOP | BUY AKASH IAS ACADEMY - TET PAPER 1 STUDY MATERIALS ( 6 BOOKS )  | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் ( 6 BOOKS ) ஆன்லைனில் வாங்க கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்துங்கள்.
 

ONLINE BOOK SHOP | BUY AKASH IAS ACADEMY - TNPSC GROUP 2 STUDY MATERIALS ( 6 BOOKS ) | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் ஆன்லைனில் வாங்க கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்துங்கள்.


ONLINE BOOK SHOP | BUY AKASH IAS ACADEMY - TNPSC GROUP 2 STUDY MATERIALS ( 6 BOOKS )  | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் ( 6 BOOKS ) ஆன்லைனில் வாங்க கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்துங்கள்.
 

ONLINE BOOK SHOP | BUY AKASH IAS ACADEMY - TNPSC GROUP 2 STUDY MATERIALS (1 BOOK ALL IN ONE) | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் ஆன்லைனில் வாங்க கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்துங்கள்.



ONLINE BOOK SHOP | BUY AKASH IAS ACADEMY - TNPSC GROUP 2 STUDY MATERIALS (1 BOOK ALL IN ONE)  | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் ஆன்லைனில் வாங்க கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்துங்கள்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில், ஜூன் 11-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில், ஜூன் 11-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு | பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஜூன் 11-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர். ஜாக்டோ-ஜியோ ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் - உயர்மட்டக்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஆர்.தாஸ், சுரேஷ், சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஒருங்கிணைப்பாளர்கள் க.மீனாட்சிசுந்தரம், செ.முத்துசாமி, அ.மாயவன், மு.அன்பரசு, ஆர்.தாமோதரன், க.வெங்கடேசன், நிதி காப்பாளர் மோசஸ் மற்றும் செய்தி தொடர்பாளர் கு.தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- காலவரையற்ற உண்ணாவிரதம் * கடந்த 8-ந்தேதி ஜாக்டோ- ஜியோ நடத்திய கோட்டை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் மற்றும் ஆதரவளித்த அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்படுகிறது. * ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை தடுக்கும் வகையில் கோட்டையை சுற்றிலும் முள்வேலி அமைத்து தடுப்பு நடவடிக்கைகளை கையாண்டு மனித உரிமைகளை மீறிய தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. * கோட்டை முற்றுகை போராட்டத்தின்போது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யவேண்டும். * பணியாளர் பகுப்பாய்வு குழுவை ரத்து செய்யவேண்டும். * நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 11-ந்தேதி முதல் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்வது எனவும், அன்று முதல் மாவட்ட தலைநகரங்களில் தினந்தோறும் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. மேற்கண்டவாறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.

TNPSC - COMBINED ENGINEERING SERVICES EXAMINATION - DATE OF EXAM: 20.05.2018 FN & AN - DETAILS OF EXAMINATION


TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION Name of the Exam Combined Engineering Service Examination Name of the Posts Assistant Engineer (Civil), Water Resources Department,PWD Assistant Engineer (Civil), Buildings, PWD Assistant Engineer (Electrical) PWD Assistant Engineer (Civil) in Highways Department Assistant Engineer in Rural Devt. and Panchayat Raj Dept. Pay Scale Rs. 9300 – 34800 + Grade pay Rs.5100/- p.m. (Pre-revised) Notification No. 5/2018 Date of Notification 28.02.2018 Last date for submission of Application 26.03.2018 Number of Vacancies 330 No. of applications successfully Registered 68,308 No. of candidates admitted 67,795 No. of candidates Rejected 513 Qualifications B.E degree in Civil Engineering or Civil and Structural Engineering OR A pass in Sections A and B of the Institution Examinations under Civil Engineering branch, subject to the following further conditions namely:- I. Should furnish evidence of having undergone practical training in surveying for a period of not less than one year. OR II. Should have put in service for a period of not less than one year in Public Works Department as Overseer or Junior Engineer. OR III. Should hold the Upper Subordinate or L.C.E Diploma of the College of Engineering, Guindy OR L.C.E. Diploma awarded by the State Board of Technical Education and Training, Chennai A degree in Electrical Engineering or Electronics and Communication Engineering OR A pass in Sections A and B of the Institution Examination with Electrical Engineering as a subject. A degree in Civil Engineering OR A pass in Sections A and B of the Institution Examinations under Civil Engineering Branch. A degree in Civil Engineering OR A pass in Sections A and B of the Institution of Engineers (India) under Civil Engineering Branch, subject to the condition that he/she should furnish evidence of having undergone practical training in surveying for a period of not less than one year. Date of Examination 20.05.2018 FN & AN (SUNDAY) Subject Fore Noon - Paper-I(Subject) One of the following subjects in which the candidate has acquired his/her Degree qualification (Degree Standard – 200 questions) (i) Civil Engineering (code No.261) Or (ii) Electrical Engineering (code No. 259) Or (iii) Electronics and Communication Engineering (Code No.304) After Noon - Paper -II General Studies (100 questions) (Subject Code No-003) General Studies (Degree Standard)-75 Questions and Aptitude and Mental Ability(SSLC Standard) - 25 Questions. Mode of Examination OMR Mode – Objective Type Exam Centre 1.Chennai, 2.Madurai, 3.Coimbatore, 4.Tiruchirappalli, 5.Tirunelveli, 6.Salem, 7.Thanjavur, 8.Chidambaram, 9.Vellore, 10.Ramanathapuram, 11.Nagercoil, 12.Kancheepuram,13.Karaikudi, 14.Pudukkottai, 15.Udhagamandalam. 

பள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக மாற்றம் - புதிய அரசாணை வெளியீடு - மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்...உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவியை வட்டார கல்வி அதிகாரி என பெயர் மாற்றம்...


மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியும், உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவியை வட்டார கல்வி அதிகாரி என பெயர் மாற்றம் செய்தும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 37,211 அரசு பள்ளிகள், 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகள், 12,419 தனியார் சுயநிதி பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளை ஆய்வு செய்து கண்காணிக்க 32 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், 67 மாவட்ட கல்வி அதிகாரிகள், 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், 836 உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள், ஓர் ஆங்கிலோ-இந்தியன் பள்ளி ஆய்வாளர் உள்ளனர். நிர்வாக அமைப்பு மாற்றம் ஒவ்வொரு அதிகாரியும் தங்கள் அதி கார வரம்பில் வரும் அனைத்துப் பள்ளிகளையும் ஆய்வு செய்வது இயலாத காரியம். இதைக் கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக அமைப்பு மாற்றி அமைக்கப்படுவதுடன் கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரமும் அளிக்கப்படுகிறது. அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வருவாய் மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து வகை பள்ளிகளையும் அதாவது மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், அனைத்து தனியார் பள்ளிகளையும் ஆய்வு செய்வர். அதேபோல், மாவட்ட கல்வி அதிகாரிகளும் தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட அனைத்து வகை பள்ளிகளையும் ஆய்வு செய்வர். மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பதவிகள் மாவட்ட கல்வி அதிகாரி பதவிக்கு இணை யான பதவியாக இருப்பதால் அந்தப் பதவிகள் மாவட்ட கல்வி அதிகாரி பதவியாக மாற்றப்படும். உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவி, வட்டார கல்வி அதிகாரி என பெயர் மாற்றம் செய்யப்படும். வட்டார கல்வி அதிகாரிகள் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மட்டுமின்றி தங்கள் அதிகார எல்லைக்கு உட்பட்ட அனைத்து வகை பள்ளிகளையும் (மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகள்) ஆய்வு செய்து கண்காணிப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  DOWNLOAD

1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடப் புத்தகங்கள் விரைவில் விற்பனை தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் தகவல்


1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடப் புத்தகங்கள் விரைவில் விற்பனை தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் தகவல் | தமிழகத்தில் 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடப் புத்தகங்கள் இம்மாத இறுதியில் விற்பனைக்கு கிடைக்கும் என்று தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குநர் டி.ஜெகந்நாதன் தெரி வித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: தமிழக பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் புதிய பாடத்திட்டம் படிப்படியாக மாற்றியமைக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக நடப்பு ஆண்டில் 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. புதிய பாடப்புத்தகங்கள் மே இறுதியில் விற்பனைக்கு கிடைக்கும். மற்ற வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் கழக விற்பனை மையங்களிலும் ஆன்லைன் மூலமும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகள் தங்களுக்கு தேவைப்படும் புத்தகங்களை ஆன்லைனில் பதிவு செய்து அதற்கான கட்டணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்தி தங்களுக்கு அருகேயுள்ள பாடநூல் கழக மண்டல அலுவலகங்களில் மொத்தமாக பெற்றுக்கொள்ளலாம். மாணவர்கள் தனியாகவும் ஆன்லைனில் பதிவுசெய்து தங்களுக்குரிய பாடப் புத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம். சிபிஎஸ்இ மாணவர்களுக்கும் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கான தமிழ்ப் புத்தகமே வழங்கப்படுகிறது. அதனால், சிபிஎஸ்இ மாணவர்களுக்கான தமிழ்ப் புத்தகங்களும் பாடநூல் கழகம் மூலமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு முப்பருவ முறை நடைமுறையில் இருப்பதால் ஓராண்டுக்கான தமிழ்ப் பாடங்கள் மூன்று தொகுப்பாக பிரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. சிபிஎஸ்இ-யில் முப்பருவ முறை கிடையாது என்பதால் அந்த மாணவர்களுக்கான தமிழ்ப் புத்தகங்கள் மட்டும் ஒரே தொகுப்பாக அச்சடித்து வழங்கப்படுகின்றன. சிபிஎஸ்இ-யில் 1 மற்றும் 9-ம் வகுப்பு தவிர மற்ற வகுப்புகளுக்கான தமிழ் பாடப்புத்தகங்கள் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட புத்தக விற்பனையகங்களிலும் விற்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பாடப்புத்தகத்திலும் அதன் விலை அச்சடிக்கப்பட்டுள்ளது. அதைவிட அதிக விலைக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட விற்பனையகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஜெகந்நாதன் கூறினார். பாடநூல் கழக நூலகம் சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள ஈவிகே சம்பத் மாளிகை கட்டிடத்தின் தரைதளத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் சிறப்பு நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பாடநூல் கழகம், கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட்டு வந்தது. மொழி, இலக்கியம், அரசியல், வரலாறு, புவியியல், உளவியல், தத்துவம், தொழில்நுட்பம், மருத்துவம், விவசாயம் என பல்வேறு துறைகளில் தமிழில் பதிப்பிக்கப்பட்ட புத்தகங்கள் தற்போது அரிய புத்தகங்கள் ஆகிவிட்டன. அந்த அரிய புத்தகங்கள் மறுமதிப்பு செய்யப்பட்டு புதிதாக அமைக்கப்படும் நூலகத்தில் வாசகர்கள் படிப்பதற்காக வைக்கப்பட உள்ளன.  DOWNLOAD

PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.


PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு  தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.

PLUS TWO PROVISIONAL MARK CERTIFICATE DOWNLOAD AND TC RELATED DETAILS | பள்ளித் தேர்வர்களுக்கு 21.05.2018 அன்று பிற்பகல் முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ் விநியோகம் செய்யப்படுகிறது.


PLUS TWO PROVISIONAL MARK CERTIFICATE DOWNLOAD AND TC RELATED DETAILS | மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு, மார்ச்/ஏப்ரல் 2018 –தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் (Provisional Mark Certificate) விநியோகித்தல் | மார்ச் 2015–ஆம் ஆண்டு முதல் மேல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிட்டபின், தேர்வர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி தேர்வர்கள் அவர்களுக்கு வழங்கப்படும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை கல்லூரிச் சேர்க்கைக்கும் மற்றும் அவசரத்தேவைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். பின்னர் மேல்நிலைத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சழுத்தம் செய்து பள்ளிக்கு விநியோகிக்கப்படும். அதன்படி, 16.05.2018 அன்று மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிட்ட பின்னர், 18.05.2018 பிற்பகல் முதல் www.peps.tn.nic.in மற்றும் www.peps.nic.in ஆகிய இரு இணையதள முகவரிகளிலிருந்து அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அவர் தம் பள்ளித் தேர்வர்களுக்கும், தனித்தேர்வர் தேர்வுமைய பள்ளித் தலைமையாசிரியர்கள் தமது மையத்தில் தேர்வெழுதிய தனித்தேர்வர்களுக்கும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தங்களுக்குப் வழங்கப்பட்ட USER ID, PASSWORD-ஐக் கொண்டு பதிவிறக்கம் செய்து அச்சான்றிதழ்களில் உள்ள விவரங்களை சரிபார்த்து, பள்ளி தலைமையாசிரியரின் கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரையிட்டு தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். மேற்படி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வருகிற 21.05.2018 அன்று பிற்பகல் முதல் பள்ளித் தேர்வர்கள்/தனித் தேர்வர்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகள்/தனித்தேர்வர் தேர்வு மையம் மூலமாக விநியோகம் செய்யப்படவேண்டும். மேற்படி நிர்ணயிக்கப்பட்ட தேதியில் மட்டுமே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை விநியோகம் செய்ய வேண்டும். பள்ளித் தேர்வர்கள் / தனித்தேர்வர்கள் தேவைப்படின் அவரவர்களே நேரடியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை http://www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்து 21.05.2018 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களில் பிழை - பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு கூடுதல் அறிவுரைகள்


கூடுதல் அறிவுரைகள்:- 1. பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்யப்படும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்த்து, அவற்றில் தலைப்பெழுத்து, பிறந்த தேதி, பெயர் ஆகியவற்றில் ஏதேனும் பிழைகள் இருப்பின், தலைமையாசிரியரே அத்திருத்தத்தை மேற்கொண்டு சான்றொப்பம் இட்டு அளித்திட வேண்டும். 2. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை விநியோகம் செய்த பின் மேற்கொள்ளப்பட்ட அனைத்துத் திருத்தங்கள் குறித்த பட்டியலை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திற்கு அனுப்பினால், மதிப்பெண் சான்றிதழ்களை அச்சிடும் முன்னர் அத்திருத்தங்கள் கணினியில் ஏற்றப்பட்டு, பிழைகள் அற்ற மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சழுத்தம் செய்து வழங்கப்படும். 3. தேர்வர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கும் போது மாற்றுச் சான்றிதழில் மேல்நிலை மதிப்பெண் சான்றிதழ் வரிசை எண்ணை எழுதும் கலத்தில் "Refer Original Certificate" என்று குறிப்பிட்டு தேர்வர்களுக்கு வழங்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. 4. அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சழுத்தம் செய்து பெறப்பட்டப் பின்னர், சம்பந்தப்பட்ட தேர்வருக்கான பள்ளியின் வசமுள்ள மாற்றுச் சான்றிதழ் பதிவேட்டின் Counter Foil -ல் சம்பந்தப்பட்ட தேர்வரது மேல்நிலை மதிப்பெண் சான்றிதழின் வரிசை எண்ணை, பதிவு செய்து கொள்ள வேண்டும். மேற்படி Counter Foil -ல் மேற்கொள்ளப்படும் பதிவுகள் நிரந்தரமாக பின்வரும் காலத்தில் சரிபார்த்தலுக்காகப் பயன்படுத்தக்கூடிய வகையில் பராமரிக்கப்பட வேண்டும்.

PLUS TWO PRIVATE RESULT AND PROVISIONAL CERTIFICATE DOWNLOAD | தனித்தேர்வர்களுக்கும் கைபேசி எண்ணிற்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக ( SMS) அனுப்பப்படும்.


PLUS TWO PRIVATE RESULT AND PROVISIONAL CERTIFICATE DOWNLOAD | தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக ( SMS) அனுப்பப்படும். 21.05.2018 பிற்பகல் முதல் தேர்வர்கள் தாங்கள் பயின்ற/தேர்வெழுதிய பள்ளி/மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாக தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். மேலும் 21.05.2018 பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள் / தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். result websites |  www.tnschools.in |www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in

PLUS TWO EXAM MARCH 2018 COPY OF THE ANSWER SCRIPT | RE TOTALLING DETAILS - விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை


PLUS TWO EXAM MARCH 2018 COPY OF THE ANSWER SCRIPT | RE TOTALLING DETAILS - விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை: விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் 17.05.2018 (வியாழக்கிழமை) முதல் 19.05.2018 (சனிக்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் தங்களுக்கு விடைத்தாளின் நகல் தேவையா அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பதை முன்னரே தெளிவாக முடிவு செய்து கொண்டு அதன் பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும். விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போர், அதே பாடத்திற்கு மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல் / மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். விடைத்தாளின் நகல் பெறுவதற்கான கட்டணம் : பகுதி – 1 மொழி - ரூ.550/- பகுதி – 2 மொழி (ஆங்கிலம்) - ரூ.550/- ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.275/- மறுகூட்டல் கட்டணம் பகுதி – 1மொழி, பகுதி – 2மொழி (ஆங்கிலம்) மற்றும் உயிரியல் ஒவ்வொன்றிற்கும் - ரூ.305/- (இரு தாட்கள் சேர்த்து) ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.205/- பணம் செலுத்தும் முறை : விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் – இணையதளத்தில் பதிவிறக்கம் செய்கொள்ளும் முறை : விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், மறுகூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவும் இயலும்.விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் வெளியிடப்படும். 

PLUS TWO JUNE EXAM | ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ள சிறப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்ப தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும்


PLUS TWO JUNE EXAM | மேல்நிலை இரண்டாம் ஆண்டு சிறப்பு துணைத் தேர்வுகள், ஜூன் 2018 : மார்ச்/ஏப்ரல் 2018-ல் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வில் தேர்வெழுத பதிவு செய்து, தேர்ச்சி பெறாதோருக்கும் / வருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைத்தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்ப தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

வேளாண்மை பல்கலைக்கழக இளநிலை படிப்புகளில் சேர மே 18 முதல் ஆன்லைனில் விண்ணப்பம்


வேளாண்மை பல்கலைக்கழக இளநிலை படிப்புகளில் சேர மே 18 முதல் ஆன்லைனில் விண்ணப்பம் | தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்புகளுக்கான தகவல் அறிக்கையை வெளியிட்ட துணைவேந்தர் கே.ராமசாமி, டீன் எஸ்.மகிமைராஜா. யில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளில் சேர வரும் 18-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று துணைவேந்தர் கே.ராமசாமி தெரிவித்தார். வேளாண்மை பல்கலைக்கழக கல்லூரிகளில் 2018-19-ம் கல்வி ஆண்டுக்கான முதலாண்டு மாணவர் சேர்க்கை குறித்த தகவல் அறிக்கையை வெளியிட்டு அவர் கூறியது: கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ், தமிழகம் முழுவதும் 14 உறுப்புக் கல்லூரிகளும், 26 இணைப்புக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் பிஎஸ்சி வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு ஊட்டச்சத்து மற்றும் உணவு முறையியல், வேளாண் வணிக மேலாண்மை, பட்டுப்புழு வளர்ப்பு, பிடெக் வேளாண்மைப் பொறியியல், உயிர்த் தொழில்நுட்பவியல், உயிர்த் தகவலியல், வேளாண்மைத் தகவல் தொழில்நுட்பம், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் ஆகிய படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பிளஸ் 2 வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவற்றுக்கு வரும் 18-ம் தேதி முதல் ஜூன் 17-ம் தேதி வரை www.tnau.ac.in/admission.html என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 22-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். ஜூலை 7-ம் தேதி சிறப்புப் பிரிவினர், 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை பொதுப்பிரிவினர், 16-ந் தேதி தொழிற்கல்வி பிரிவு, 17 மற்றும் 18-ம் தேதிகளில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் தொழில்துறையினருக்கு கலந்தாய்வு நடக்கும். 2-ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 23 முதல் 27-ம் தேதி வரை நடைபெறும். ஆகஸ்டு 1-ம் தேதி கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்கும். இம்மாதம் 31-ம் தேதியுடன் மாணவர் சேர்க்கை நிறைவு பெறும். இந்த ஆண்டு முதல்முறையாக ஒற்றைச்சாளர முறையில், ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என்றார். பகுதிநேர பொறியியல் படிப்பு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ், தமிழகத்தில் செயல்பட்டு வரும் 9 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 6 வகையான பகுதி நேர பொறியியல் படிப்புகளில் சேர ஏப்ரல் 5 முதல் மே 10 வரை விண்ணப்பித்தவர்களின் விவரம் 19-ம் தேதி ஆன்லைனில், வெளியிடப்படும். இதுதொடர்பாக பகுதிநேர மாணவர் சேர்க்கை செயலாளர் வி.செல்லதுரை, 'தி இந்து'விடம் கூறியது: 26, 27-ம் தேதிகளில் விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணி நடக்கும். சான்றிதழ் சமர்ப்பிக்காமல் விட்டிருந்தால், அப்போது நேரில் வந்து சமர்ப்பிக்கலாம். 30 அல்லது 31-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, ஜூன் 2-ல் மாநில அளவிலான கலந்தாய்வு, கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் (சிஐடி) நடைபெறும் என்றார். DOWNLOAD

பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை (16.05.2018) வெளியீடு


8.66 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை வெளியீடு | தமிழகம், புதுச்சேரியில் 8.66 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு நாளை வெளியிடப்படுகிறது. காலை 9.30 மணி முதல் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும். பள்ளி மாணவ, மாணவிகளின் உயர் கல்வியை தீர்மானிக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி முடிவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் பள்ளி மாணவ, மாணவிகள், தனித்தேர்வர்கள் என 8,66,934 பேர் தேர்வு எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடைந்தது. தமிழகம் முழுவதும் 80 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன. இப்பணியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் ஈடுபட்டனர். விடைத்தாள் மதிப்பீட்டு பணி முடிவடைந்ததும் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு அப்பணியும் நிறைவடைந்தது. பிளஸ் 2 தேர்வு முடிவு மே 16-ம் தேதி வெளியிடப்படும் என்று, தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பாகவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை (16-ம் தேதி) வெளியிடப்படுகிறது. சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத் துறையின் தலைமை அலுவலகத்தில் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நாளை காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார். தேர்வு முடிவு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட அடுத்த சிறிது நேரத்தில் மாணவ, மாணவிகளின் செல் போன் எண்ணுக்கு மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். மாணவ, மாணவிகள் கீழ்க்கண்ட இணையதளங்களில் தங் கள் பதிவு எண், பிறந்த தேதி யைக் குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in , www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றவர்களின் பட்டியல் (Rank List) வெளியிடும் முறை கடந்த ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது. மாணவர்கள் மத்தியில் மனச்சோர்வு ஏற்படுவதையும், தேவையில்லாமல் பள்ளிகளுக்கு இடையே ஆரோக்கியமில்லாத போட்டி உருவாவதை தடுக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. எனவே, இந்த ஆண்டும் பிளஸ் 2 தேர்வு ரேங்க் பட்டியல் எதுவும் வெளியிடப்படாது. 1200-க்கு 1100-க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர், 1000-க்கு மேல் எடுத்தவர்கள் எத்தனை பேர் என்பது போன்ற விவரங்களும், பாடவாரியாக 200-க்கு 200 பெற்றவர்களின் எண்ணிக்கை விவரங்களும் மட்டுமே வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் தொடர்பான அனைத்து புள்ளி விவரங்களையும் அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் செய்தியாளர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  DOWNLOAD

BT TO PG (MATHS) PROMOTION PANEL DOWNLOAD AS ON 01.01.2018 | பட்டதாரி ஆசிரியர் / பள்ளித் துணை ஆய்வர் / வட்டார வளமைய பயிற்றுநர் பதவியில் இருந்து முதுகலையாசிரியர் ( MATHS ) பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த நபர்களின் தற்காலிக பெயர்பட்டியல்


BT TO PG (MATHS) PROMOTION PANEL DOWNLOAD AS ON 01.01.2018 | 01.01.2018 நிலவரப்படி அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிப் பட்டதாரி ஆசிரியர் / பள்ளித் துணை ஆய்வர் / வட்டார வளமைய பயிற்றுநர் பதவியில் இருந்து முதுகலையாசிரியர்  ( MATHS ) பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த நபர்களின் தற்காலிக பெயர்பட்டியல் DOWNLOAD

BT TO PG (PHYSICS) PROMOTION PANEL DOWNLOAD AS ON 01.01.2018 | பட்டதாரி ஆசிரியர் / பள்ளித் துணை ஆய்வர் / வட்டார வளமைய பயிற்றுநர் பதவியில் இருந்து முதுகலையாசிரியர் ( PHYSICS ) பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த நபர்களின் தற்காலிக பெயர்பட்டியல்


BT TO PG (PHYSICS) PROMOTION PANEL DOWNLOAD AS ON 01.01.2018 | 01.01.2018 நிலவரப்படி அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிப் பட்டதாரி ஆசிரியர் / பள்ளித் துணை ஆய்வர் / வட்டார வளமைய பயிற்றுநர் பதவியில் இருந்து முதுகலையாசிரியர்  ( PHYSICS ) பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த நபர்களின் தற்காலிக பெயர்பட்டியல்  DOWNLOAD

BT TO PG (CHEMISTRY) PROMOTION PANEL DOWNLOAD AS ON 01.01.2018 | பட்டதாரி ஆசிரியர் / பள்ளித் துணை ஆய்வர் / வட்டார வளமைய பயிற்றுநர் பதவியில் இருந்து முதுகலையாசிரியர் (தாவரவியல்) பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த நபர்களின் தற்காலிக பெயர்பட்டியல்


BT TO PG (CHEMISTRY) PROMOTION PANEL DOWNLOAD AS ON 01.01.2018 | 01.01.2018 நிலவரப்படி அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிப் பட்டதாரி ஆசிரியர் / பள்ளித் துணை ஆய்வர் / வட்டார வளமைய பயிற்றுநர் பதவியில் இருந்து முதுகலையாசிரியர்  (தாவரவியல்) பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த நபர்களின் தற்காலிக பெயர்பட்டியல்  DOWNLOAD

BT TO PG (BOTANY) PROMOTION PANEL DOWNLOAD AS ON 01.01.2018 | பட்டதாரி ஆசிரியர் / பள்ளித் துணை ஆய்வர் / வட்டார வளமைய பயிற்றுநர் பதவியில் இருந்து முதுகலையாசிரியர் (தாவரவியல்) பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த நபர்களின் தற்காலிக பெயர்பட்டியல்


BT TO PG (BOTANY) PROMOTION PANEL DOWNLOAD AS ON 01.01.2018 | 01.01.2018 நிலவரப்படி அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிப் பட்டதாரி ஆசிரியர் / பள்ளித் துணை ஆய்வர் / வட்டார வளமைய பயிற்றுநர் பதவியில் இருந்து முதுகலையாசிரியர்  (தாவரவியல்) பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த நபர்களின் தற்காலிக பெயர்பட்டியல் DOWNLOAD

BT TO PG (MATHS) PROMOTION PANEL DOWNLOAD AS ON 01.01.2018 | 01.01.2018 நிலவரப்படி அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிப் பட்டதாரி ஆசிரியர் / பள்ளித் துணை ஆய்வர் / வட்டார வளமைய பயிற்றுநர் பதவியில் இருந்து முதுகலையாசிரியர் (கணிதம்) பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த நபர்களின் தற்காலிக பெயர்பட்டியல்


BT TO PG (ZOOLOGY) PROMOTION PANEL DOWNLOAD AS ON 01.01.2018 | 01.01.2018 நிலவரப்படி அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிப் பட்டதாரி ஆசிரியர் / பள்ளித் துணை ஆய்வர் / வட்டார வளமைய பயிற்றுநர் பதவியில் இருந்து முதுகலையாசிரியர்  (கணிதம்) பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த நபர்களின் தற்காலிக பெயர்பட்டியல் DOWNLOAD

BT TO PG (ENGLISH) PROMOTION PANEL DOWNLOAD AS ON 01.01.2018 | பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணி மாறுதல் மூலம் முதுகலையாசிரியராக (ஆங்கிலம்) பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் தற்காலிக தேர்ந்தோர்பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது


BT TO PG (ENGLISH) PROMOTION PANEL DOWNLOAD AS ON 01.01.2018 | தமிழ்நாடு - பள்ளிக்கல்வி – மேல்நிலைக்கல்விப்பணி – 01.01.2018   நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணி மாறுதல் மூலம் முதுகலையாசிரியராக (ஆங்கிலம்) பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் தற்காலிக தேர்ந்தோர்பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது DOWNLOAD

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சார்ந்த விவரங்களை ஊடகங்கள் இணையதளத்தில் டவுன்லோட் செய்யும் வகையில் புதிய முறை அறிமுகம் - அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சார்ந்த விவரங்களை ஊடகங்கள் இணையதளத்தில் டவுன்லோட் செய்யும் வகையில் புதிய முறை அறிமுகம் - அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு | பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சார்ந்த விவரங்களை ஊடகங்கள் இணையதளத்தில் டவுன்லோட் செய்யும் வகையில் புதிய முறை அறிமுக படுத்த உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 16 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு dge.tn.nic.in , dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. DOWNLOAD

பள்ளிகளில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அலுவலக விலாசம் தொலைபேசி என் மற்றும் விழிப்புணர்வு வாசகம் அமைந்த அறிவிப்பு பலகை வைத்தல் - இயக்குநரின் செயல் முறைகள்


பள்ளிகளில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அலுவலக விலாசம் தொலைபேசி என் மற்றும் விழிப்புணர்வு வாசகம் அமைந்த அறிவிப்பு பலகை வைத்தல் - இயக்குநரின் செயல் முறைகள்   DOWNLOAD

அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) அனைத்துப் பள்ளிகளும் - ஆன்-லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்வது தொடர்பான அறிவுரைகள்.



 அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை–6 - மேல்நிலைப் பொதுத் தேர்வு, மார்ச்/ஏப்ரல் 2018 – அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML)  அனைத்துப் பள்ளிகளும் - ஆன்-லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்வது தொடர்பான அறிவுரைகள்.  DOWNLOAD