Tuesday, July 31, 2018

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகம் முழுவதும் 20 லட்சத்துக் கும் மேற்பட்டோர் எழுதியிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக் கான மதிப்பெண் மற்றும் தரவரிசை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் (கிரேடு-3), மற்றும் கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பல்வேறு பதவிகளில் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 11-ம் தேதி ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய இந்த தேர்வை 20 லட்சத் துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். தேர்வில் பொது அறிவு மற்றும் பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகிய பகுதிகளில் இருந்து ''அப்ஜெக்டிவ்" முறையில் 200 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒரு வினாவுக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. குரூப்-4 தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி என்ற போதும் தேர்வெழுதியவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் களில் பொறியியல் பட்டதாரிகளும் அடங்குவர். தேர்வு முடிந்து 5 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். இந்த நிலையில், குரூப்-4 தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியலை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) நேற்று மாலை வெளியிடப்பட்டது. 20 லட்சம் பேர் தேர்வு எழுதியிருப்பதால் அனை வரும் ஒரேநேரத்தில் மதிப்பெண் விவரங்களை பார்க்க முயற்சிக் கும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்படும் வாய்ப்பை கருத்தில் கொண்டு முதல்முறையாக 2 சர்வர் கள் மூலம் முடிவுகளை அறிந்து கொள்ள டிஎன்பிஎஸ்சி ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மதிப்பெண் மற்றும் தரவரிசை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக விரைவில் தேர்வுமுடிவுகள் வெளி யிடப்படும். அதைத்தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக்கு நேர்காணல் கிடையாது. எனவே, எழுத்துத்தேர்வில் வெற்றி பெற் றாலே ஏதேனும் ஓர் அரசு பணி வாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, July 28, 2018

பள்ளிக் கல்வித்துறை கண்டிப்பு - நல்லாசிரியர் விருது விதி திருத்தம் : குறுக்கீடு இருக்கக்கூடாது


அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுக்கான விதிகளில் பள்ளிக் கல்வித்துறை திருத்தம் செய்துள்ளது. மேலும், கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதால் விண்ணப்பம் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகின்றனர். அந்த நாளில் பள்ளி ஆசிரியர்களை பெருமைப்படுத்தும் வகையில் விருதுகள் வழங்கப்படுகிறது. மாநில அரசுகள் சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் தமிழகத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்ற பெயரில் வழங்கப்படுகிறது. அது போல தேசிய நல்லாசிரியர் விருதுகள் குடியரசுத் தலைவர் கையால் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் ஆண்டுதோறும் 350 பேருக்கு நல்லாசிரியர் விருது டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் வழங்கப்படும். விருது பெற விரும்புவோர் பட்டியல் மாவட்ட வாரியாகமுதன்மைக் கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் பெயர்களை பரிந்துரை செய்வார்கள். ஆனால் இந்த ஆண்டுக்கான விருதுக்கு விண்ணப்பிக்கும் முறையிலும், விதிகளிலும் பள்ளிக் கல்வித்துறை சில மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி விண்ணப்பங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் ஆசிரியர்களே நேரடியாக அனுப்ப வேண்டும். மேலும், ஆசிரியர் பணியில் தாங்கள் செய்த சாதனை, கற்றல் கற்பித்தல் பணியில் செய்துள்ள அணுகு முறைகள், எழுதிய நூல்கள் போன்றவற்றை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். வெறும்அனுபவத்துக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல், ஆசிரியர்களின்திறமை, மாணவர்களை உருவாக்கிய திறமை, ஒழுக்க நடைமுறைகள் போன்றவற்றை பள்ளிக்கல்வித்துறை ஆய்வு செய்ய உள்ளது. அத்துடன், இந்த ஆண்டுக்கான விருதுகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால் ஆன்லைன் விண்ணப்பங்கள் வருவதும் குறைந்துள்ளது. ஆசிரியர் தினம் கொண்டாட இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் விண்ணப்பங்கள் வருவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதுதவிர விருது பெறுவோருக்கு ஆதரவாக உள்ளூர் பிரமுகர், அரசியல் பிரமுகர், மாவட்ட ஆட்சியர் போன்றவர்களின் பரிந்துரைகளுக்கு இடம் கொடுக்காமல் விருதுக்கான நபர்கள் தேர்வு செய்யப்படஉள்ளதால் ஆசிரியர்கள் ஒருபுறம் கலக்கத்தில் உள்ளனர். மேலும், விண்ணப்பபரிசீலனையில் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் போன்றவர்களின் தலையீடு இல்லாமல் பட்டியல் தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதனால் கவனமாக பட்டியல் தயாரிக்கும் பணியும் நடக்கிறது. ஆன்லைன் விண்ணப்பங்களில் தவறுகள், சந்தேகம் இருந்தால் அவை உடனடியாக நீக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

Wednesday, July 25, 2018

‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு

ஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும். தமிழ்நாடு மாநில பொதுப்பள்ளி கல்வி வாரிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேற்கண்ட தகவலை அரசாணையில் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளில் கணினி வழி பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன்.

அரசு பள்ளிகளில் கணினி வழி பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன். சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும், ஜாபர்கான்பேட்டை, உயர்நிலை பள்ளி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. அந்த பள்ளியை, அமைச்சர் செங்கோட்டையன், நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாநகராட்சி கல்வித்துறை துணை கமிஷனர், மகேஸ்வரி ரவிக்குமார் உடன் இருந்தார்.பின், அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: மாநகராட்சி பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன. 90 சதவீத பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சியை பெற, மாணவர்களை தயார் செய்து வருகின்றன. 3,000 அரசு பள்ளிகளில், விரைவில், 'ஸ்மார்ட்' வகுப்பறை அமைக்கப்படும். ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, கணினி வாயிலாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Friday, July 6, 2018

மாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு!

மாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு! கரூர், தேனி, சிவகங்கை, திண்டுக்கல், நாகப்பட்டினம், நீலகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.



டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு முறைகேடு: தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு


டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் முறைகேடு நடந்தது தெரியவந்தால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். விவாதம் தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், பொதுத் துறை, மாநிலச் சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. விவாதத்தை தொடங்கிவைத்து தி.மு.க. உறுப்பினர் கே.என்.நேரு (திருச்சி மேற்கு தொகுதி) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:- வேலைக்கு செல்ல முடியாத நிலை கே.என்.நேரு:- சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் என சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் ரூ.20 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இவை விமர்சனத்திற்கு ஆளாகின. முன்பு முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் ஓய்வூதியம் ரூ.500 ஆக இருந்தது. அதை ரூ.5 ஆயிரமாக உயர்த்தியவர் கருணாநிதி. கடந்த ஆண்டு அது ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஏராளமானவர்கள் இன்றும் சிரமமான நிலையில் உள்ளனர். ஒரு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்கள் பிறகு எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, அரசு அதை கவனத்தில் கொள்ளவேண்டும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மிகுந்த சிரமப்படுவதாக உறுப்பினர் இங்கே குறிப்பிட்டார். அதனால் தான், ரூ.12 ஆயிரமாக இருந்த ஓய்வூதியம் ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மருத்துவ செலவு கட்டணமும் உயர்த்திக் கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை கே.என்.நேரு:- எம்.எல்.ஏ.க்கள் என்றால் தினமும் 4 பெரிய காரியங்களுக்கு செல்ல வேண்டும். தொகுதி மக்களை சந்திக்க வேண்டும். திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டும். மாலையில் விளையாட்டு போட்டிகளை தொடங்கிவைக்க செல்ல வேண்டும். இப்படி, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்வதால் செலவு அதிகரிக்கிறது. எனவே, அந்தத் தொகையை மட்டும் தந்தால்போதும். எங்களுக்கு சம்பளமே வேண்டாம். அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) இன்றைக்கு கேள்விக்குறியான நிலையில் உள்ளது. 2014-ம் ஆண்டு நடந்த குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற 74 பேரில் 62 பேர் சென்னையில் உள்ள 2 பயிற்சி மையத்தை சேர்ந்தவர்கள். முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டப்படி நடவடிக்கை அமைச்சர் ஜெயக்குமார்:- கடந்த 2014-2015-ம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப்-1 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக பத்திரிகை, தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானது. இது தொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகமே போலீசில் புகார் அளித்தது. இந்த தேர்வை ரத்து செய்யச்சொல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தியதில், 4 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 'சஸ்பெண்டு' நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கே.என்.நேரு:- திருச்சியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஆனால், 7 தேசிய நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்தில் ஏற்கனவே தி.மு.க. ஆட்சி காலத்தில் 300 ஏக்கர் பரப்பளவில் பஸ் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதில், 120 ஏக்கர் அரசு நிலமாகும். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- ஒருங்கிணைந்த பஸ் நிலையம் தொடர்பாக மாநகராட்சியின் பரிந்துரையில் உறுப்பினரின் கோரிக்கையும் சேர்க்கப்பட்டு ஆய்வு செய்யப்படும். காலிப் பணியிடம் அமைச்சர் ஜெயக்குமார்:- உறுப்பினர் இங்கே எம்.எல்.ஏ.க்கள் சம்பள உயர்வை பற்றி பேசினார். முதலில் உயர்த்திய சம்பளத்தை அவரது கட்சித் தலைவர் வாங்கிக்கொள்ளட்டும். கே.என்.நேரு:- இந்த விஷயத்தில் என்னை ஏன் கோர்த்து விடுகிறீர்கள்?. எங்கள் தலைவர் சொன்னால், நாங்களும் உயர்த்தப்பட்ட சம்பளத்தை வாங்கமாட்டோம். தமிழக அரசுப் பணிகளில் 5½ லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. தற்போது, பணியிடங்களை வரைமுறைப்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. அதை ரத்து செய்ய ஜாக்டோ - ஜியோ அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அதை நிறைவேற்ற வேண்டும். அமைச்சர் ஜெயக்குமார்:- 2011-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை 2 லட்சத்து 35 ஆயிரத்து 135 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இவ்வாறு விவாதம் நடந்தது.