ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு 

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு அவகாசம் ஏப்ரல் 12-ம் தேதி வரை நீட்டிக் கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத் தின்படி அனைத்து வகை பள்ளி களிலும் ஆசிரியராக பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் டெட் தேர்வு நடத்தப்பட்டு வரு கிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 28-ம் தேதி டிஆர்பி வெளியிட்டது. தொடர்ந்து இணையதள விண் ணப்பப் பதிவு கடந்த மார்ச் 15-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடி வடைந்ததாக இருந்தது. இறுதி கட்டத்தில் பெரும்பாலானவர்கள் ஒரே நேரத்தில் விண்ணப்பிக்க முயன்றதால் இணையதள வேகம் குறைந்தது. இதனால் பலர் விண்ணப்பங்களை பதிவு செய்வதில் குளறுபடிகள் ஏற் பட்டன. இதையடுத்து இணையதளம் சரிவர வேலை செய்யாததால் விண்ணப்பிக்க முடியாத சூழல் நிலவுகிறது. தொழில்நுட்ப குறை பாட்டை உடனே சரிசெய்து தேர்வு வாரியம் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்த னர். இதையேற்று ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு அவகாசத்தை ஏப்ரல் 12-ம் தேதி வரை டிஆர்பி நீட்டித்துள் ளது. அதன்படி பட்டதாரிகள் www.trb.tn.nic.in இணையதளம் வழியாக மேலும் ஒரு வாரத்துக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் பொதுப்பிரிவுக்கு ரூ.500, எஸ்சி/எஸ்டி பிரிவுக்கு ரூ.250-ம் இணையதளம் மூலம் செலுத்த வேண்டும். மேலும், ஜூலையில் டெட் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment