தேசிய திறனாய்வுத் தேர்வு முடிவு

1.5 லட்சம் மாணவர்கள் எழுதிய தேசிய திறனாய்வுத் தேர்வு முடிவு ஆன்லைனில் இன்று வெளியீடு தமிழகம் முழுவதும் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதியிருந்த தேசிய திறனாய்வுத் தேர்வின் முதல் கட்ட தேர்வு முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படுகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10-ம் வகுப்பு படிக்கும் சிறந்த மாணவர்களை தேர்வுசெய்து அவர்களுக்கு பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக ஆண்டுதோறும் தேசிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. முதலில் மாநில அளவிலும் அதில் தேர்வு செய்யப்படுவோருக்கு தேசிய அளவிலும் தேர்வு நடத்தப்படும். அந்த வகையில், முதல்கட்ட தேர்வான மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 30 மாணவ-மாணவிகள் தேர்வெழுதினர். இத்தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வின் முடிவுகள் 9-ம் தேதி (இன்று செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் வெளியிடப்படுகின்றன. தேர்வர்கள் தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்'' என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment