KALVISOLAI TNPSC

Friday, 24 April 2020

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறித்து ஆய்வு : மே மத்தியில் பலி 38,000-ஆக அதிகரிக்‍கும் என கணிப்பு

இந்தியாவில் மே மாதத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்‍கை 38 ஆயிரமாக அதிகரிக்‍கும் என ஆய்வில் கணக்‍கிடப்பட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள ஜவஹர்லால் நேரு அறிவியல் ஆராய்ச்சிக்‍கழகம், இந்திய அறிவியல் நிறுவனம், மும்பையில் உள்ள ஐ.ஐ.டி மற்றும் புனேவில் உள்ள ராணுவத்திற்கான மருத்துவக்‍கல்லூரி ஆகியவை இணைந்து, இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தின.

அதில், மே மாத மத்தியில் 38 ஆயிரம் பேர் கொரோனாவால் பலியாகலாம் என்றும், 30 லட்சம் பேர் பாதிக்‍கப்படலாம் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இத்தாலி மற்றும் அமெரிக்‍காவில் கொரோனா பாதிப்புகள் பன்மடங்கு அதிகரித்ததன் விகிதாச்சாரத்தை அடிப்படையாகக்‍ கொண்டு, இந்த புள்ளிவிவரம் உருவாக்‍கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a comment