KALVISOLAI TNPSC

Friday, 24 April 2020

ஆசிரியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து - சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

எஸ் . சி . பிரிவைச் சேர்ந்த மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் உள்ள
பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு பழங்குடியினர் இனத்தைச்
சேர்ந்தவர்களை கொண்டே 100 சதவீத பணியிடங்களும் நிரப்பப்பட வேண்டும் என்று
கடந்த 1986 - ம் ஆண்டில் ஆந்திர பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்தது .

இந்த உத்தரவை மாநில நிர்வாக தீர்ப்பாயம் ரத்து செய்து உத்தரவிட்டது . இதை
எதிர்த்து ' ஆந்திர அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த
நிலையில் , 1998 - ம் ஆண்டு மாநில நிர்வாக தீர்ப்பாயத்தின் தடை உத்தரவு
ரத்து செய்யப்பட்டது . இதைத்தொடர்ந்து ஆந்திர அரசு 2000 - வது ஆண்டில்
மீண்டும் இது தொடர்பாக அரசாணை பிறப்பித்து எஸ் . சி . பிரிவினர் அதிகமாக
வசிக்கும் பகுதிகளில் பழங்குடியினருக்கு ஆசிரியர் பணியிடங்களுக்கு
மீண்டும் 100 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தியது.

ஆந்திர அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சி . லீலா பிரசாத்ராவ் உள்ளிட்டோர்
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர் . இந்த வழக்கை நீதிபதிகள் அருண்
மிஸ்ரா , இந்திரா பானர்ஜி , வினித் சரண் , எம் . ஆர் . ஷா , அனிருத்தா
போஸ் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது .

இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது : - ஆந்திர
அரசு , இந்த இடஓதுக்கீடு முறையை பரிசீலனை செய்ய வேண்டும் . இந்த
பரிசீலனையின்போது உண்மையான பயனாளர்கள் பாதிக்கப்படாத வகையில்
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் . கடந்த பல ஆண்டுகளாக உள்ள
இடஒதுக்கீடு நடைமுறையில் , போதுமான முன்னேற்பாடுகள் , நடவடிக்கைகள்
இந்திரா சாஹானி பரிந்துரையின்படி அமல்படுத்தப்பட வேண்டும் என்ற ராஜீவ்
தவானின் கருத்தை இந்த அமர்வு ஏற்றுக்கொள்கிறது .


2000 - வது ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் , 3 / 2000 அரசாணையின்படி
, 100 சதவீத அனுமதி என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது .
இந்திரா சாஹானி பரிந்துரையில் இது 50 சதவீதம் என்றே இருந்தது .
தாழ்த்தப்பட்டோர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒரு பிரிவினருக்கு மட்டும்
100 சதவீத ' இடஒதுக்கீடு வழங்கப்படுவதை ஏற்கமுடியாது .

பழங்குடியின மாணவர்களுக்கு அதே பிரிவைச் சேர்ந்தவர்களே பாடம் கற்பிக்க
வேண்டும் என்ற யோசனை அபத்தமானது . மற்ற பிரிவு மக்கள் சொல்லிக்கொடுத்தால்
, பழங்குடியினர் மாணவர்களுக்கு புரியாதா ? மாணவர்களின் கல்வித்தரம்
அவர்கள் சார்ந்த சமுதாயத்தை வைத்து கணக்கிடப்படுவதை ஏற்றுக்கொள்ள இயலாது
.

ஆந்திர மாநில அரசின் இந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது . இதுவரை
பணியமர்த்தப்பட்டவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை . இனிமேல்
பணியமர்த்தப்பட உள்ளவர்கள் விவகாரத்தில் மாநில அரசு மிகுந்த
எச்சரிக்கையுடன் நடக்க வேண்டும் . இவ்வாறு இந்த தீர்ப்பில் கூறப்பட்டு
உள்ளது .

No comments:

Post a comment