KALVISOLAI TNPSC

Friday, 24 April 2020

வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகமாக காணப்படுகிறது. 

வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் 8 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் சதம் அடித்தது. திருச்சி, கரூரில் 105 டிகிரி பாரன்ஹீட்டும், மதுரையில் 104 டிகிரி பாரன்ஹீட்டும், சேலம் மற்றும் வேலூரில் 103 டிகிரியும், தருமபுரியில் 102 டிகிரியும், நாமக்கல்லில் 101 டிகிரி பாரன்ஹீட்டும் வெப்பநிலை பதிவானது. 

உள்மாவட்டங்களில் வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.    

No comments:

Post a comment